×

செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்காமல் திரும்பி சென்ற பாக். வீரர்கள்..!!

சென்னை: செஸ் ஒலிம்பியாட்டில் கலந்துக்கொள்ள வந்த பாகிஸ்தான் வீரர்கள் போட்டியில் கலந்துகொள்ளாமல் சென்னையில் இருந்து புனேவிற்கு புறப்பட்டு சென்றனர். 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை மாமல்லபுரத்தில் நேற்று தொடங்கியது. இதற்கான ஏற்பாடுகள் கடந்த சில மாதங்களாகவே தீவிரமாக நடைபெற்று வந்தன. ஜூலை 28ம் தேதி தொடங்கிய இந்த போட்டிகள் ஆகஸ்ட் 10 வரை நடைபெற்ற உள்ளன. இதில் சுமார் 187 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.

இதற்காக கடந்த சில நாட்களாகவே பல்வேறு நாடுகளில் இருந்தும் வீரர்கள் சென்னைக்கு வந்து கொண்டு இருக்கின்றனர். அதன்படி, மாமல்லபுரத்தில் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொள்வதற்காக பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த செஸ் விளையாட்டு வீரர்கள் 19 பேர் நேற்று காலை புனேவில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்து சேர்ந்தனர். அவர்களை சென்னை விமான நிலையத்தில் தமிழக அரசு அதிகாரிகளும், ஒலிம்பியாட் வரவேற்பு குழுவினரும் வரவேற்று சிறுசேரியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், பாகிஸ்தான் வீரர்கள் 19 பேரும் நேற்று இரவு திடீரென சிறுசேரி தனியார் நட்சத்திர விடுதியில் இருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர். அங்கிருந்து இரவு 11 மணிக்கு புனே சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் அவர்கள் புனேவுக்கு திரும்பி சென்றனர். செஸ் ஒலிம்பியாட்டில் கலந்துக்கொள்ள வேண்டாம் என பாகிஸ்தான் அரசு கூறிவிட்டதால் போட்டியில் பங்கேற்காமல் வீரர்கள் திரும்பி சென்றதாக கூறப்படுகிறது.


Tags : Bach ,Chess Olympiad , Chess Olympiad, Bach. Soldiers, neglect
× RELATED பேரவையில் பாக். ஆதரவு கோஷம் காங்கிரஸ்...