வெளிநாட்டில் மருத்துவம் படித்த மாணவர்கள் தமிழ்நாட்டில் பயிற்சி மருத்துவராக பணிபுரிய கட்டணம் குறைப்பு.: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: வெளிநாட்டில் மருத்துவம் படித்த மாணவர்கள் தமிழ்நாட்டில் பயிற்சி மருத்துவராக பணிபுரிய ரூ.30,00 கட்டினால் போதும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் மருத்துவ பணி செய்ய எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலை.க்கு ரூ.3.2 லட்சம் கட்ட வேண்டியிருந்தது. மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ரூ.2 லட்சம் வசூலிக்கப்பட்டு வந்தது. மாணவர்கள் கோரிக்கையை எடுத்து தமிழக அரசு நடவடிக்கை காரணமாக கட்டணம் ரூ.30,000-ஆக குறைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: