×

78 நாடுகளில் 18,000 பேருக்கு குரங்கு அம்மை தொற்று பரவியது!: தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த WHO வேண்டுகோள்..!!

ஜெனிவா: உலகம் முழுவதும் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை கடந்துள்ளதாக கூறியுள்ள உலக சுகாதார மையம், ஐரோப்பிய நாடுகளில் நோய் பரவல் தீவிரமடைந்து வருவதாக எச்சரித்திருக்கிறது. கொரோனா பரவலுக்கு இடையே குரங்கு அம்மை தொற்றும் 75க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதிகளவில் குரங்கு அம்மை பாதிப்பு பதிவாகி வருகிறது. ஜெனிவாவில் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம், இதுவரை 78 நாடுகள் மூலம் உலக சுகாதார அமைப்பிற்கு 18 ஆயிரத்திற்கும் கூடுதலான குரங்கு அம்மை பாதிப்பு பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டிருப்பதாக கூறினார்.  

இந்த பாதிப்புகளில் 70 சதவீதம் ஐரோப்பிய நாடுகளிலும், 25 சதவீதம் அமெரிக்காவிலும் ஏற்பட்டு உள்ளன. குரங்கு அம்மை பாதிப்பு எதிரொலியாக இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன. தொற்றால் ஏற்பட்ட வலிக்கு சிகிச்சை பெற சுமார் 10 சதவீதம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார். இந்தியாவில் இதுவரை 4 பேருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குரங்கு அம்மை தொற்று தீவிரமாக பரவ தொடங்கியுள்ள நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் WHO கேட்டுக்கொண்டுள்ளது. ஐரோப்பியா மற்றும் அமெரிக்காவில் குரங்கு அம்மை பரவி வருவதையடுத்து குரங்கு அம்மை நோயை சர்வதேச சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் பிரகடனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : WHO , 78 countries, 18,000 people, monkey measles, WHO
× RELATED எல்லை தாண்டி ஓடிய தீவிரவாதிகளை கொல்ல...