×

இந்தியன் 2 மீண்டும் ஆரம்பிக்கிறது அமெரிக்கா சென்றார் கமல்

சென்னை: இந்தியன் 2 படத்தின் பணிகளுக்கான நடிகர் கமல்ஹாசன் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். விக்ரம் படத்தில் நடித்த கமல்ஹாசன், அந்த படத்தின் வெற்றியால் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். பட்ஜெட் காரணமாக, நிறுத்தப்பட்ட அவரது இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். இந்நிலையில் இந்தியன் 2 படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனத்துக்கும் இயக்குனர் ஷங்கருக்கும் இடையில் சமரசம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து வரும் அக்டோபர் மாதம் முதல் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசனின் மேக்அப் திருப்தியாக அமையவில்லை என்றும் ஹாலிவுட் கலைஞர்களை கொண்டு மேக்அப் தயார் செய்ய வேண்டும் என்றும் ஷங்கர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து ஹாலிவுட் மேக்அப் கலைஞர்களை சந்தித்து மேக்அப் தொடர்பாக ஆலோசிக்க கமல்ஹாசன் சென்னையிலிருந்து நேற்று முன்தினம் இரவு அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார்.

Tags : Indian ,Kamal ,America , Indian 2 starts again Kamal went to America
× RELATED நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட...