×

நிலம் தந்தால் ரயில்வே வேலை லாலு பிஏ கைது

புதுடெல்லி: பீகார் முன்னாள் முதுல்வர் லாலு பிரசாத் யாதவ் மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் தண்டனை அனுபவித்து வருகின்றார். உடல்நிலை பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இதற்கிடையே, கடந்த 2005 மற்றும் 2009 வரையிலான காலகட்டத்தில் ரயில்வே அமைச்சராக லாலு இருந்தபோது நிலத்தை பெற்றுக்கொண்டு ரயில்வேயில் வேலை வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த மே 18ம் தேதி லாலு, அவரது மனைவி, மகள்கள் மற்றும் 12 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

இந்நிலையில் நிலத்தை பெற்றுக்கொண்டு ரயில்வேயில் வேலையில் சேர்த்து மோசடி செய்ததில் லாலுவின் சிறப்பு பணி அதிகாரி போலா யாதவ்விற்கு முக்கிய பங்கு உள்ளதாக கருதப்படுகிறது. இதன் எதிரொலியாக போலா யாதவிற்கு சொந்தமான 4 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். தர்பாங்கா மற்றும் பாட்னாவில் அவருக்கு சொந்தமான இரண்டு இடங்களில் இந்த சோதனை நடத்தினர். பின்னர் அவரை அதிகாரிகள் கைது செய்தனர்.

Tags : PA , Railway work, Lalu PA, arrested
× RELATED அரசமைப்பு சட்டத்தை மதிப்பதாக மோடி...