×

எரிசக்தித்துறை மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம்: அமைச்சர் செந்தில்பாலாஜி

சென்னை: மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.வி செந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில் இன்று (27.07.2022) தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைமை அலுவலத்தில் எரிசக்தித் துறை மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அதனை செயல்படுத்துதல் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இதில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு.ராஜேஷ் லக்கானி, இ.ஆ.ப., அனைத்து இயக்குநர்கள் மற்றும் தலைமையிட தலைமைப் பொறியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆய்வுக் கூட்டத்தில் நடப்பு 2022-2023 ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்பட வேண்டிய பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

பணிகளை எடுத்து முடிப்பதற்கு தேவையான தளாவாட பொருட்கள் மற்றும் மின் சாதனங்களை கொள்முதல் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார். மின்மாற்றிகளில் மீட்டர் பொருத்துவது, மேலும், தமிழ்நாடெங்கும் சூரியசக்தி பூங்காக்கள் நிறுவுவது மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு சொந்தமான பழைய காற்றாலைகளை மாற்றி புதிய காற்றாலைகளை சூரியசக்தியுடன் இணைந்த மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவது சம்பந்தமாக விரிவான திட்ட அறிக்கை குறித்து கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சூரியசக்தி பூங்காக்கள் நிறுவுவதற்காக நிலம் கேட்டு ஏற்கனவே  கடிதம் அனுப்பப்பட்ட நிலையில் திருவாரூர், கரூர், சேலம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து சூரியசக்தி பூங்காக்கள் நிறுவுவதற்காக மொத்த நிலம் - 3273 செயல்படுத்துவதற்கான நிலம் கண்டறியப்பட்டிருக்கிறது. நிலத்தை கையகப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு  உரிய அலுவலர்களை மாண்புமிகு அமைச்சர் அறிவுறுத்தினார்.     

மாண்புமிகு தளபதி அவர்களுடைய ஆணைக்கிணங்க தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் கடந்த மாதம் 16.06.2022 முதல் நேற்று வரை சிறப்பு பராமரிப்பு பணிகள் ஒரு மாத கால அளவிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அந்த பணிகள் மிக சிறப்பாக நிறைவு பெற்று இருக்கின்றன. நேற்று வரை 10,37,677 சிறப்பு பராமரிப்பு பணிகள் நிறைவுபெற்று  அதில் 2,070 துணைமின் நிலைய பராமரிப்பு பணிகள் நிறைவுப்பெற்று இருக்கின்றன.  மரக்கிளைகள் அகற்ற பட்டது மட்டும் 5,88,000 மரக்கிளைகள் அகற்றப்பட்டுருக்கின்றன.  பழுதடைந்த மின் கம்பங்கள் மாற்றப்பட்டது மட்டும் 33,772 புதிதாக சாய்ந்து இருக்கின்ற மின் கம்பங்களில் 27,560 மின் கம்பங்கள் சரி செய்யப்பட்டன.  இப்படி 19 இனங்களில் மொத்தம் 10,37,677 பராமரிப்பு பணிகள் மிக சிறப்பாக நிறைவு செய்யப்பட்டுள்ளது.   தமிழ்நாடு மின்சார வாரியத்தினுடைய பராமரிப்பு பணிகளில் ஒரு மாத காலத்தில் அதிக எண்ணிக்கையில் பராமரிப்பு பணிகளை செய்திருக்கும் வரலாற்று நிகழ்வை தமிழ்நாடு மின்சார வாரியம் அனைத்து துறைகள் அலுவலர்கள் ஒத்துழைப்போடு மிக சிறப்பாக நிறைவுச் செய்யப் பட்டுருக்கின்றன.  

இன்று நடைபெற்று கொண்டிருக்கிற ஆய்வு கூட்டங்களில் பராமரிப்பு பணிகளோடு சேர்த்து 2 ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.  தமிழகத்தைப் பொறுத்த வரை சூரிய மின் உற்பத்திக்கான பூங்கா அமைக்ககூடிய பணி குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டன.  சூரிய மின் சக்தி பூங்கா எந்தந்த மாவட்டங்களில் அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது என்பதை ஆய்வு செய்யப்பட்டு தமிழக முதலமைச்சர் தளபதி அவர்கள் முதல் பூங்காவை திருவாரூர் மாவட்டத்தில் அமைக்கப்படும் என்ற வரலாறு சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள்.  தமிழகத்தைப் பொறுத்தவரை திருவாரூர், கரூர், நாகபட்டினம், சேலம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் ஒட்டுமொத்தமாக 3273 ஏக்கர் நிலங்கள் இந்த சூரிய மின் சக்தி பூங்கா அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டு மின் வாரியத்திற்கு அந்த நிலத்தினுடைய வகைபாடுகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படுகிறது. நிலம் வகைமாற்றம் செய்யப்பட்டதற்கு பிறகு விரைவில் அதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு இந்த பூங்கா அமைப்பதற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களில் திருக்கரங்களால் அடிக்கல் நடப்பட இருக்கின்றன.  

அதற்கடுத்து விவசாயிகளுக்காக 50,000 மின் இணைப்பு வழங்குவதற்கான சிறப்பு வாய்ந்த அறிவிப்பை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் அடிப்படையில் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டன.  இந்த 50,000 விவசாயிகளுக்கான மின் இணைப்பு வழங்க கூடிய வரலாற்று நிகழ்வை வருகின்ற செப்டம்பர் முதல் வாரத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களில் திருக்கரங்களால் தொடங்கி வைப்பதற்கான ஆயத்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.  விரைவாக அந்த பணிகளுக்கு என்னென்ன தலவாட சாமான்கள் தேவை என்பதெல்லாம் கண்டறியப்பட்டு அதை கொள்முதல் செய்வதற்கான பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன.  புதிய துணை மின் நிலையங்கள் அமைப்பதற்காக முதலாமாண்டு குறிப்பாக 216 துணை மின் நிலையங்களும் 2ஆம் ஆண்டு 100 துணை மின் நிலையங்களும் மொத்தம் 316 துணை மின் நிலையங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.  

இந்த 2 ஆண்டுகளில் 316 துணை மின் நிலையங்கள் அமைப்பதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இந்த 316 துணை மின் நிலையங்களில் 233 துணை மின் நிலையங்களுக்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு டெண்டர்  வழங்கும் நிலையில் இருக்கின்றன.  மீதம் இருக்ககூடிய 83 துணை மின் நிலையங்களுக்கான இடங்கள் விரைவாக தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளன.  எனவே அந்த பணிகளும் முழுமையாக நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுருக்கின்றன.  தமிழ்நாடு மின்சார வாரியத்தை பொறுத்தவரைக்கும் நம்முடைய ஒட்டுமொத்தமாக மின் தேவையில் மரபுசார எரிசக்தினுடைய அந்த உற்பத்தி என்பது அந்த வரலாற்று நிகழ்வை கடந்த ஆண்டினிலே குறிப்பாக இந்த சில மாதங்களில் மட்டும் மின்சார வாரியம் உருவாக்கியுள்ளது.

1,08,000 மில்லியன் யூனிட் நம்முடைய ஒட்டுமொத்த மின் நுகர்வு என்று சொன்னால் அதில் ஏறத்தாழ 26,480 மில்லியன் யூனிட் அளவிற்கு மரபுசாரா எரிசக்தி மூலமாக இதில் ஈடுசெய்யப்பட்டு இருக்கின்றன.  இது கடந்த காலங்களை விட ஏறத்தாழ 3,571 மில்லியன் யூனிட் என்பது ஏறத்தாழ 357 கோடி யூனிட் என்பது அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு இதில் மிகப்பெரிய சாதனை நிகழ்வை மின்சார வாரியம் நிறைவேற்றி இருக்கின்றன.  எனவே இந்த அளவிற்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களோடு சேர்த்து மின் உற்பத்திக்கான அந்த பணிகளும் வடசென்னை அனல் மின் நிலையத்தினுடைய நிலை 3ன் மின் உற்பத்திக்கான திட்டங்களும், அதேபோல எண்ணூர் புதிய மின் உற்பத்திக்கான திட்டங்களும், உப்பூர், உடன்குடி உள்ளிட்ட திட்ட பணிகளை விரைவாக முடிப்பதற்கான இந்த ஆய்வு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு திட்டமிடல் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன.  

காற்றாலைகள் பொறுத்தவரைக்கும் நம்ம ஒட்டுமொத்தாக 8,616 மெகா வாட்டில் இருந்து உட்சபட்சமாக 5,689 மெகாவாட் அளவிற்கு 03.07.2022 அன்று அதிகபட்சமான உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.  அதேபோல் உற்பத்தி செய்யக்கூடிய ஒரு நாள் அதிகப்பட்ச மின்சாரம் என்பது ஏறத்தாழ 120 மில்லியன் யூனிட் அளவிற்கு காற்றாலைகளில் 09.07.2022 அன்று பதிவு செய்யப்பட்டுருக்கின்றன.  ஏறத்தாழ 35 விழுக்காடு அளவிற்கு இந்த காற்றாலைகளின் மூலமாக தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு உற்பத்திகள் செய்யப்பட்டுருக்கின்றன.  சூரிய மின் சக்தியைப் பொறுத்தவரைக்கும் 5,676 மெகாவாட்டில் இருந்து உட்சபட்ச அளவாக இருக்ககூடிய 3,633 மெகாவாட் அதாவது 05.03.2022 அன்று பதிவாகி அதற்கான உற்பத்திகள் செய்யபட்டு ஒரு சாதனை நிகழ்த்த பட்டிருக்கின்றன.  இது ஒரு நாளின் அதிகபட்ச தேவை உற்பத்தி என்பது 27 மில்லியன் யூனிட் அளவிற்கு 01.03.2022 அன்று உற்பத்தி செய்யப்பட்டு அதுவும் ஒரு புதிய வரலாறைப் படைத்திருக்கின்றன.

ஒட்டு மொத்தமாக நமது உற்பத்தியும் அந்த விநியோகத்திற்கான கட்டமைப்புகளை வலுபடுத்தக் கூடிய பணிகளும் ஆய்வுகளிலே மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லப்பட்டு பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன.  எனவே இந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எல்லாம் வரக்கூடிய மார்ச் மாதங்களில் ஏறத்தாழ முழுமைப் பெறக்கூடிய ஆயத்தப் பணிகளை மின்சார வாரியம் முன்னெடுத்திருக்கின்றன. தமிழ்நாடு மின்சார வாரியம் இந்தியாவிலேயே குறைந்த கட்டணத்தில் மின் விந்யோகம் செய்து வருகிறது.  குறிப்பாக 100 யூனிட் மின்சாரம் இலவச மின்சாரம், அதில் அரசு மானியம் 3500 கோடி கூடுதலாக கொடுக்கப்பட்டு 12,500 கோடி அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளன.  100 யூனிட் பயன்படுத்துவர்கள் கர்நாடகாவில் 592 ரூபாயும் உத்திரப்பிரதேசத்தில் 515 ரூபாயும் குஜராத்தில் 515 ரூபாயும்  கட்டுகிறார்கள்.

இந்தியாவிலேயே குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதி செய்ய 143 டாலருக்கு தமிழ்நாடு அரசால் கொள்முதல் செய்யப்படுகிறது.  203 டாலருக்கு கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்ற சுற்றறிக்கை மத்திய அரசிடன் இருந்து வரப்பெற்றுள்ளது.  அதிமுக அரசு ஒரு வருடத்தில் 37 விழுக்காடு அளவிற்கு கட்டணங்களை உயர்தினார்கள்.  சிறு குறு தொழிற்சாலைகளுக்கு 2010-2011ல் திமுக ஆட்சியில் ஒரு யூனிடிற்கு ரூ.1.80  இருந்ததை அவர்கள் ரூ.4 ஆக உயர்த்தினார்கள், தற்போது 50 பைசா தான் உயர்த்தியுள்ளோம்.  அதேபோல் பவர்லும் ரூ.1 இருந்த கட்டணம் ரூ.1.30 ஆக உயர்த்தினார்கள், தற்போது வெறும் 70 பைசா மட்டும் தான் உயர்த்தப்பட்டுள்ளது.  தொழிற்சாலைகளுக்கு 4 ரூபாயிலிருந்து 6.35 ரூபாயாக உயர்த்தினார்கள் தற்போது வெறும் 1.15 ரூபாயாக உயர்த்தியுள்ளோம்.  எச்.டி தொழிற்சாலைப் பொறுத்தவரை 4 ரூபாயிலிருந்து 6.35 ரூபாயாக உயர்த்தினார்கள் நம் தற்போது 40 பைசா தான் உயர்த்தியுள்ளோம்.  

பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு சிறிய கட்டண மாற்றம் தான் மின்சார வாரியம் மேம்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது.  நமக்கு கொடுக்க வேண்டிய மானியம் வராது நமக்கு கொடுக்க வேண்டிய 30,000 கோடி கடன் வழங்கப்பட மாட்டாது ஏற்கனவே செயப்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு 3,200 கோடி நிதி கொடுக்க முடியாது வங்கிகள் கடன் வழங்ககூடாது இப்படிப்பட்ட அழுத்தங்கள், ஏற்கனவே இருந்த 1,59,000 கோடி கடன் இதுபோன்ற சூழ்நிலையில் தான் மின் கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

Tags : Energy Department ,Minister ,Senthilpalaji , Review meeting on action taken on notices issued during Energy Department grant request: Minister Mr. V Senthilbalaji
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...