×

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மேம்படுத்த ரூ.1.64 லட்சம் கோடியில் புதிய திட்டத்தை செய்யப்படுத்த ஒன்றிய அரசு முடிவு!!

டெல்லி: பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மேம்படுத்த ரூ.1.64 லட்சம் கோடியில் புதிய திட்டத்தை செய்யப்படுத்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. பி.எஸ்.என்.எல். நிறுவனத்துடன் பி.பி.என்.எல். நிறுவனத்தை இணைக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது.

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை வலுப்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்க எடுத்துள்ளதாக தொலைதொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை வலுப்படுத்தவும் சேவைகளை விரிவுப்படுத்தவும் ரூ 1.64 லட்சம் கோடி வழங்க ஒன்றிய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.   

பி.எஸ்.என்.எல். நிறுவனத்துடன் பி.பி.என்.எல். நிறுவனத்தை இணைக்க ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் ஒன்றிய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  

மேலும் 5 ஜி அலைக்கற்றை இதுவரை ரூ.1.49 லட்சம் கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் 9-வது சுற்று ஏலம் நடைபெற்று கொண்டிருக்கிறது என தொலைதொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

Tags : Union Government , BSNL The Union Government has decided to implement a new project worth Rs.1.64 lakh crore to improve the company!!
× RELATED தமிழகத்துக்கு பதில் குஜராத்தில் ஆலை...