×

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தங்கத்தால் ஆன காதணி கிடைத்த நிலையில், ஈட்டி, இடுக்கி போன்ற ஆயுதங்களும் கண்டுபிடிப்பு

தூத்துக்குடி: ஆதிச்சநல்லூரில் நடைபெற்று வரும் அகழாய்வில் சில வாரங்களுக்கு முன்பு தங்கத்தினால் ஆன காதணி கிடைத்த நிலையில், தற்போது ஈட்டி மற்றும் இடுக்கி போன்ற ஆயுதங்களும், அவற்றின் மீது நெல் படிமங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் அகழாய்வுப்பணிகள் கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. 8 மாத காலமாக நடந்து வரும் இந்த அகழாய்வில் 70க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தங்கத்தால் செய்யப்பட்ட காதணி சில வாரங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. இது சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கால கட்டத்தை சேர்ந்தது என்றும், 20 கேரட் தங்கத்தால் செய்யப்பட்டது என்பதும் தெரிய வந்தது.

இந்நிலையில் தற்போது ஈட்டி ஒன்றும், இடுக்கி போன்ற ஆயுதமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிலேயே முதல் முறையாக ஆதிச்சநல்லூரில் தான் கிடைத்ததுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழ்வாராய்சியில் கற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட கோடாரி கிடைத்துள்ளது. சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் உள்ள வைப்பாற்றின் கரையில் மார்ச் 16ம் தேதி முதல் ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகின்றன. சுடுமண்ணால் ஆன பகடைக்காய், முத்து மணிகள், சங்கு வளையல்கள், காளை உருவம், விளையாட்டு பொருட்கள் உள்ளிட்டவை இதுவே கிடைத்த நிலையில் தற்போது கோடாரிகள் கண்டறியப்பட்டுள்ளது இவை கற்காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என கூறப்படுகிறது.  


Tags : Adichanallur , Adichanallur, excavation, gold, earring, spear, tongs
× RELATED முன் விரோதம் காரணமாக ஓபிஎஸ் அணி...