×

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு ‘ராம்சர்’ அங்கீகாரம் முதல்வர் பாராட்டு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் நேற்று வெளியிட்டுள்ள பதிவு:பள்ளிக்கரணை சதுப்பு நிலம், பிச்சாவரம் அலையாத்தி காடுகள், கரிக்கிலி பறவைகள் காப்பகம் ஆகியவை தற்போது ஈரநிலங்களுக்கான உலகின் மதிப்பு மிகுந்த ‘ராம்சர்’ அங்கீகாரத்தை பெற்றுள்ளன. ஏற்கனவே இவ்வங்கீகாரத்தை பெற்ற கோடியக்கரையையும் சேர்த்து, தமிழ்நாட்டில் உள்ள ராம்சர் பகுதிகளின் எண்ணிக்கை நான்காக ஆகியுள்ளது. இத்தகைய நிலையை எட்டியிருப்பதற்காக தமிழ்நாடு வனத்துறையை பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Chief Minister ,Ramsar ,Pallikarana wetland , Chief Minister praises 'Ramsar' recognition for Pallikarana wetland
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...