×

மதுரை அருகே கோவிலில் முதல் மரியாதை: இரு தரப்பினர் இடையே பயங்கர மோதல்

மதுரை: மதுரை அருகே கோவிலில் முதல் மரியாதை தரவில்லை என்று கூறி இரு தரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. மதுரை உசிலப்பட்டி அருகே உள்ள வாலாந்தூர் அங்காள ஈஸ்வரி அம்மன் கோவிலில் கடந்த 10-ம் தேதி குடமுழுக்கு விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து குடமுழுக்கு நாளில் இருந்து 48-வது நாளான இன்று சிறப்பு பூஜை ஏற்பாடுகள் செய்யப்பட்டு ஆயிரக்கணக்கான பக்கதர்கள் பால்குடம் எடுத்து வழிபட்டு வந்தனர். இந்த விழாவின் போது முதல் மரியாதையை கொடுப்பதில் ஒரே சமுதாயத்தை சேர்ந்த இருபிரிவினரருக்கு இடையே முன்னதாகவே தகராறு ஏற்பட்டுள்ளது.  இன்றும் ஏற்பட்ட மோதலில் இருதரப்பினரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இந்த போராட்டத்தை தடுத்து நிறுத்த சென்றுள்ளனர் அப்போது போராட்டம் கலவரமாக மாறியதால் அந்த காவலர்கள் காயமடைந்துள்ளனர். அவர்களை உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து  பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு 100-க்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த கோவிலில் முதல் மரியாதை யாருக்கு வழங்குவது தொடர்பாக பிரச்சினை என்பது நீண்ட நாட்களுகாவே இருந்து வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு சுமுக தீர்வை ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மோதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Madurai , First respect at temple near Madurai: Fierce clash between two sides
× RELATED பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக...