×

புதிய செயலி மூலம் ஆசிரியர்களின் வருகை பதிவு: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

சென்னை: தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் 10 இயக்குநர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 14 ஆயிரத்து 709 பணியாளர்கள் உள்ளனர். தொடக்க கல்வித்துறையின் கீழ் 31 ஆயிரத்து 336 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 537 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். பள்ளிக் கல்வி துறையின் கீழ் 6,218 உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 863 பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் நாள்தோறும் பணிக்கு வரும் போது அந்தந்த அலுவலக வருகைப் பதிவேடுகளில் 10 மணிக்குள் கையொப்பமிட வேண்டும்.

இந்நிலையில், மாணவர்களின் வருகையை அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள் கணக்கிட்டு செல்போன் மூலம் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தினமும் அனுப்பி  வைக்க வேண்டும். அதேபோல, ஆசிரியர்களும் தங்கள் வருகைப் பதிவை தினமும் பள்ளிக் கல்வித்துறையின் இணைய தளமான EMISல் உள்ள பிரத்யேக செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும். தினமும் 10 மணிக்குள் தங்கள் வருகையை பதியாவிட்டால், அவர்கள் அந்த நாள் பணிக்கு வரவில்லை என்று கருதப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேற்கண்ட EMISல் வருகையை பதிவு செய்ய புதியதாக செயலி ஒன்றை பள்ளிக்கல்வித்துறை உருவாக்கியுள்ளது. அந்த செயலி மூலம் தான் வருகைப் பதிவை ஒவ்வொரு ஆசிரியரும் உறுதி செய்ய வேண்டும். இந்த புதிய திட்டம் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Tags : School Education Department Directive , Teachers Attendance Registration Through New App: School Education Department Directive
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...