×

கனியாமூர் தனியார் பள்ளி மாணவர்களுக்கு புதன்கிழமை முதல் ஆன்லைன் வகுப்புகள் நடத்த ஏற்பாடு: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

சென்னை: கனியாமூர் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு வரும் புதன்கிழமை முதல் ஆன்லைன் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருக்கிறார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், கனியாமூர் பள்ளி மாணவர்களை அருகாமையிலுள்ள பள்ளிகளில் படிக்கச் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் வன்முறையில் சேதமடைந்த தனியார் பள்ளியை திறப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ஷர்வன் குமார் ஜடாவத், எஸ்பி பகலவன் ஆகியோருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார். இதன்பி செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவி உயிரிழப்பை தொடர்ந்து கலவரத்தில் சூறையாடப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளி மாணவர்களுக்கு புதன்கிழமை முதல் ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடக்கும் என அறிவித்துள்ளார்.

கலவரம் காரணமாக பள்ளி சேதமடைந்து மாணவர்கள் கல்வியை தொடர முடியாத சூழலில், ஆன்லைன் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். பெற்றோர் – ஆசிரியர் கழகத்தின் சார்பில் கருத்துக்கள் கேட்கப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். மேலும், 9,10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகளை தயார் செய்து அடுத்த வாரம் முதல் வகுப்பு தொடங்கப்படும் என்றும் கனியாமூர் பள்ளி மாணவர்களை அருகாமையில் உள்ள பள்ளிகளில் படிக்கச் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

Tags : Kaniamoor ,Minister ,Anbil Mahesh , Arrangements to conduct online classes for Kaniyamoor private school students from Wednesday: Minister Anbil Mahesh interview
× RELATED கனியாமூர் பள்ளி மாணவி மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மே 28-க்கு ஒத்திவைப்பு