ஓட்டல் சரவண பவன் உரிமையாளரை எதிர்த்த ஜீவஜோதியின் கதை: தமிழ் பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகிறது

டெல்லி: கணவர் கொலை வழக்கில் பிரபல ஓட்டல் சரவண பவன் உரிமையாளரை எதிர்த்து இளம்பெண் ஜீவஜோதி நடத்திய சட்ட போராட்டத்தை மைய கருவாக கொண்டு தோசா கிங் என்ற பெயரில் ஹிந்தி திகில் திரைப்படம் தயாராகிறது. பிரபல திரைப்பட நிறுவனம் ஜங்கிலி பிக்சர்ஸ் தயாரிக்கும் தோசா கிங் திரைப்படத்தை தமிழ் பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் காவல்துறை அடக்குமுறையயை சித்தரிக்கும் வகையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கியவர்.

ஓட்டல் தொழில் சாம்பவான் பி.ராஜகோபாலை எதிர்த்து ஜீவஜோதி 18 ஆண்டுகள் சட்டப்போராட்டம் நடத்தி வழக்கில் தண்டனை பெற்று தந்த நிகழ்ச்சிகளின் தொகுப்பாக தோசா கிங் திரைப்படம் தயாரிக்கப்படுகிறது. வழக்கில் உச்சநீதி மன்றத்தால் 20 ஆண்டுகள் ராஜகோபாலுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. படத்தின் மைய கருவுக்கு தொடர்புள்ள காட்சிகளை அன்றைய பத்திரிக்கையாளராக தாம் நேரில் பார்த்தவை என்பதால் திரைக்கதையில் கதாபாத்திரங்களை, காட்சிகளையும் அழுத்தமாக பதிவு செய்யவுள்ளதாக திரைப்படத்தை இயக்க உள்ள த.செ.ஞானவேல் தெரிவித்துள்ளார். ஜங்கிலி திரைப்பட நிறுவனம் டாக்டர் ஜி, போ லாட் கி ஹேய் கான், உலாட்ச் மற்றும் கிளிக் சங்கர் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: