×

கண்டலேறு அணையில் திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர் பூண்டி வந்தது

சென்னை: ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் நேற்று மாலை பூண்டி நீர்த்தேக்கம் வந்தடைந்தது, முன்னதாகதமிழக எல்லையான ஜீரே பாயிண்டில் அமைச்சர், எம்.பி., எம்எல்ஏக்கள் மலர் தூவி உற்சாகமாக வரவேற்றனர். சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆந்திரா – தமிழக நதிநீர் ஒப்பந்தப்படி ஆண்டுதோறும் ஆந்திர அரசு தமிழகத்துக்கு பல்வேறு கட்டங்களாக மொத்தம் 15 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும். இந்நிலையில், கடந்த தவணை காலத்தில் 7.6 டிஎம்சி மட்டுமே தமிழகத்துக்கு கிடைத்தது. இதனால், ஆந்திராவிடம் இருந்து நிலுவையில் உள்ள 4.4 டிஎம்சி கிருஷ்ணா நீரை பெற தமிழக அரசு நீர்வளத்துறைக்கு உத்திரவிட்டது.  இதை தொடர்ந்து நீர்வளத்துறை சென்னை மண்டல தலைமை பொறியாளர், ஆந்திர நீர்வளத்துறை தலைமை பொறியாளருக்கு கடிதம் எழுதினார்.இதையடுத்து, தமிழக அரசின் கோரிக்கை தொடர்பாக ஆந்திர அரசிடம் அங்குள்ள நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதைதொடர்ந்து, கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு கடந்த 14ம் தேதி காலை 9 மணியளவில் வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து, படிப்படியாக உயர்த்தி 2,100 கன அடியாக திறந்து  விடப்பட்டது. பின்னர், இந்த தண்ணீர் 152 கிலோ மீட்டர் கடந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைக்குப்பம் ஜீரோ பாயின்டை நேற்று காலை  வந்தடைந்தது.  இந்த தண்ணீரை தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், திருவள்ளூர் எம்பி ஜெயகுமார், எம்எல்ஏக்கள் கும்மிடிபூண்டி டி.ஜெ.கோவிந்தராஜன், வி.ஜி.ராஜேந்திரன், ஆர்.கிருஷ்ணசாமி மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர்.நேற்று மாலை  கிருஷ்ணா நீர் பூண்டி நீர்த்தேக்கம் வந்தடைந்தது….

The post கண்டலேறு அணையில் திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர் பூண்டி வந்தது appeared first on Dinakaran.

Tags : Krishna ,Chennai ,Andhra State Detection Dam ,Bundi Reservoir ,Discover dam ,Krishna Water Garundi ,Dinakaran ,
× RELATED பாலியல் புகாரில் கைதான கலாஷேத்ரா...