×

வேலூர் அண்ணா சாலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி-கலெக்டர் தொடங்கி வைத்தார்

வேலூர் : வேலூர் அண்ணா சாலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.44வது உலக செஸ் ஒலிம்பியாட் போடடியானது தமிழகத்தில் முதன்முறையாக நடைபெறுவதையொட்டி அரசு சார்பில் அதற்கான ஏற்பாடுகளை மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில், இந்த போட்டி குறித்து அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகின்றன. வேலூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் விளையாட்டு துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு இடையே செஸ்போட்டிகள், அரசு ஊழியர்கள் இடையே செஸ் போட்டிகள் நடத்தப்பட்டது. இந்நிலையில், அதன்படி, வேலூர் அண்ணா சாலையில் உள்ள காந்தி சிலை அருகே நேற்று விழிப்புணர்வு பேரணி நடந்தது.

கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்து பங்கேற்ார். காந்தி சிலை அருகே தொடங்கிய இந்த பேரணி மக்கான் சந்திப்பு, பழைய பஸ் நிலையம் வழியாக பழைய மாநகராட்சி அலுவலகம் அருகே நிறைவடைந்தது.இதில் எம்எல்ஏ கார்த்திகேயன், மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், கமிஷனர் அசோக்குமார், மண்டலக்குழு தலைவர் நரேந்திரன், நகர்நல அலுவலர் (பொறுப்பு) முருகன், மாநகராட்சி நியமன குழு உறுப்பினர் கணேஷ்சங்கர், சுகாதார அலுவலர்கள் சிவகுமார், லூர்துசாமி, கவுன்சிலர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Tags : Chess Olympiad ,Anna Road, Vellore , Vellore: Collector organized an awareness rally of students on the occasion of Chess Olympiad on Anna Road, Vellore
× RELATED செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தி,...