×

ரீ எண்ட்ரி கொடுக்கும் யமஹா RX100... 2026-ம் ஆண்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்ப்பு

சென்னை: ஏறாத வயசு.. குறையாத மவுசு பாவம் டா நம்ப பாய்ஸ் என்ற சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கட்டிப்போட்டு காதல் செய்ய வைத்துகொண்டுருக்கும் ஒரு சிறுத்தைக்குட்டி தான் இந்த யமஹா RX100 1990-களில் இந்த பைக் வைத்திருந்தல் போதும் அவர்தன் அந்த ஏரியாவில் கெத்து. 1 லட்சம் குடுத்தால் கூட விற்கமாட்டேன் என்று, இன்றும் சாலைகளில் அந்த உருவல் சத்தத்தோடு இந்த RX100 பைக்கை தாறுமாறாக ஒட்டி நம்மை திரும்பி பக்கவைக்கும் இளைஞர்கள் இருக்கின்றனர்.

எனேன்றால் அந்த சத்தம். இந்த வண்டியின் மீது உள்ள அலாதி பிரியத்தால் இந்த வண்டியை யமஹா நிறுவனமே கைவிட்டாலும், இதன் காதலர்கள் இந்தனை கைவிடவில்லை. அதனால் இந்த model பழைய வண்டிகளை வாங்கி அதுக்கு re-model செய்தும், புத்துஉயிர் கொடுத்தும் பயன்படுத்தி வருகின்றனர். வயசு வித்தியாசம் இல்லாமல் அனைவராலும் கொண்டாடபட்ட இந்த பைக் 1985-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்டு விற்கப்பட்டு வந்துள்ளது.

2 ஸ்டோக் என்ஜின் கொண்டு இருந்தால் BS3 விதிகளுக்கு உட்படவில்லை. இதனால் இதனை மேலும் தயாரிக்காமல் நிறுவனம் இந்த model தயாரிப்பை நிறுத்திவிட்டது. இப்பொழுது இந்த வண்டிக்கான வரவேற்பு இன்னும் குறையாத காரணத்தினால் இதனை தேடிக்கொண்டுருக்கும் இதன் ரசிகர்களுக்காக மீண்டும் களத்தில் இறக்க யமஹா நிறுவனம் முடிவெடுத்துள்ளது. பழைய RX100 model இணையாக இந்த புதிய model பைக் தயாரிக்கப்படும் என்றும் யமஹா நிறுவனம் உறுதியளித்துள்ளது.

உத்திர பிரதேஷ் மற்றும் சென்னை உள்ளிட்ட தொழிற்சாலையில் புதிய யமஹா RX100 தயாரிக்கப்படவுள்ளதாக சொல்லப்பட்டுருக்கிறது. 2026-ம் ஆண்டு சந்தையில் விற்பனைக்காக இந்த model பைக் வரும் என்றும் கூறப்படுகிறது. இப்போதே இதன் ரசிகர்கள் எப்போடா booking open பண்ணுவீங்க என்று இணையத்தில் இந்த செய்தியை தீயாய் பரப்பி வருகின்றனர்.


Tags : Yamaha , Re-entry Yamaha RX100 expected to go on sale in 2026
× RELATED யமஹா பைக்குகள்