×

யமஹா பைக்குகள்

யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம், மான்ஸ்டர் எனர்ஜி யமஹா மோட்டா ஜிபி எடிஷன் வரிசையில் ஆர்15எம், எம்டி 15 வி 2.0 பைக்குகள் மற்றும் ரே இசட்ஆர் எப்ஐ ஹைபிரிட் ஸ்கூட்டர் அறிமுகம் செய்துள்ளது. லிமிடெட் எடிஷன்களாக இவை வெளிவந்துள்ளன. இந்த மாதம் மூன்றாவது வாரத்தில் இருந்து இவை விற்பனைக்கு கிடைக்கும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆர்15எம் மற்றும் ஆர்எம்15வி2 -ல் 155 சிசி லிக்விட் கூல்டு 4 ஸ்டிரோக் எஸ்ஓஎச்சி 4 வால்வு பியூயல் இன்ஜெக்ஷன் இன்ஜின் இடம் பெற்றுள்ளது.

இதுபோல், ரே இசட்ஆர்எப்ஐ ஹைபிரிட் ஸ்கூட்டரில் 125 சிசி ஏர்கூல்டு 4 ஸ்டிரோக் எஸ்ஓஎச்சி 2 வால்வு இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இந்த ஸ்பெஷன் எடிஷன்களின் ஷோரூம் விலையாக ஆர்15எம் சுமார் ரூ.1,97,200, எம்டி 15 வி.2.0 சுமார் ரூ.1,72,700 மற்றும் ரே இசட்ஆர் 125 எப்ஐ ஹைபிரிட் சுமார் ரூ.92,330 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

The post யமஹா பைக்குகள் appeared first on Dinakaran.

Tags : Yamaha Bikes ,Yamaha Motor India Company ,Monster ,Yamaha ,Dinakaran ,
× RELATED மேடையில் கண்ணீர் விட்ட பிரியா பவானி