×

பெண் குழந்தைகளை கொலை செய்ய முயன்ற தாய்க்கு அதிரடி உத்தரவிட்டது: உயர் நீதிமன்றம்

வேலூர்: பெண் குழந்தைகளை பெற்றுக்கொள்வதை கேவலமாக எண்ணுவதை சமூகம் இன்னும் திருத்தி கொள்ளாதது துரதிருஷ்டவசமானது என்று சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. வேலூர் மாவட்டம், பொன்னை பகுதியைச் சேர்ந்த சத்யா என்ற பெண்ணுக்கு லத்திகா, ஹாசினி, சத்யா என மூன்று பெண் குழந்தைகள் பிறந்தன.

மூன்றும் பெண் குழந்தைகள் என்பதால், அவர்களுக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலைக்கு முயன்றார். 2 குழந்தைகள் இறந்த நிலையில், உயிர் தப்பிய சத்யாவுக்கு வேலூர் விரைவு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சத்யா மேல்முறையீடு செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பெண் குழந்தை பெறுவதை கேவலமாக எண்ணும் போக்கு இன்னும் தொடர்வது குறித்து வேதனை தெரிவித்தது. சத்யாவை விடுதலை செய்த நீதிமன்றம்,  உயிருடன் இருக்கும் 2 குழந்தைகளையும் பட்டப்படிப்பு வரை படிக்க வைப்பதாக சத்யா உத்தரவாத பத்திரம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நீதிமன்றத்தில் ஆஜராகி குழந்தைகளை படிக்க வைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.



Tags : Action: High Court , High Court orders action against mother who tried to kill girls
× RELATED தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட...