அம்பத்தூர்: அம்பத்தூர், சோழம்பேடு 81வது வார்டில் தனியாருக்கு சொந்தமான கிறிஸ்துவ பள்ளி உள்ளது. இந்த பள்ளி கடந்த 5 வருடங்களாக சொத்து வரி கட்டாமல் ரூ8 லட்சத்து 86 ஆயிரம் பாக்கிவைத்துள்ளது. வரிகட்ட சொல்லி அம்பத்தூர் மண்டல வருவாய்த்துறை அதிகாரிகள் 6 மாதத்திற்கு ஒரு முறை நோட்டீஸ் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பள்ளி நிர்வாகம் சார்பில் வரி செலுத்தாமல் இருந்ததால் நேற்று உதவி வருவாய் அலுவலர் லோகநாதன் மற்றும் ஊழியர்கள் பள்ளிக்குச் சென்று பிரின்சிபல் அறைக்கு சீல் வைத்தனர். மேலும் சில அறைகளையும் சீல் வைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.