×

கும்மிடிப்பூண்டி அரசு பள்ளியில் முப்பெரும் விழா: எம்எல்ஏ டி. ஜெ. கோவிந்தராஜன் பங்கேற்பு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் உள்ள கே.எல்.கே.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் குறுவட்ட அளவிலான சதுரங்க போட்டி துவக்க விழா, அடல் ஆய்வக திறப்பு விழா, பள்ளி வளாகத்தில் கண்காணிப்பு கேமிரா திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தலைவர் சகிலா அறிவழகன், பெற்றோர் ஆசிரியர் கழக கௌரவ தலைவர் கே.எல்.கே.சீனிவாச பெருமாள், பொருளாளர் அறிவழகன், துணை தலைவர்கள் ச.ரமேஷ், ஏ.மனோகரன், பேரூராட்சி துணை தலைவர் கேசவன், இணை செயலாளர் கு.சண்முகம், துணை செயலாளர் ஜோ.கிளமெண்ட், கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மு.மணிபாலன் முன்னிலை வகித்தனர்.  

பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரமேஷ் வரவேற்றார். பள்ளி வளாகத்தில்  அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமிராக்களை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தரான் திறந்து வைத்தார். மேலும் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட அடல் ஆய்வகத்தை திறந்து வைத்த எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன்,  இந்த ஆய்வகத்தின் சிறப்பம்சங்கள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் மகாமலிபுரத்தில் வரும் 28ம் தேதி பிரதமரால் துவக்கி வைக்கப்பட உள்ள உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை ஒட்டி குறுவட்ட அளவிலான சதுரங்க போட்டியை எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் துவக்கி வைத்தார். இந்த சதுரங்க போட்டியில் கும்மிடிப்பூண்டி குறுவட்டத்தை சேர்ந்த பல்வேறு பகுதிகளில் இருந்து 390மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இந்த விழாவில் புதுகும்மிடிப்பூண்டி முன்னாள் ஊராட்சி தலைவர் மா.செல்வராஜ், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் நஸ்ரத் இஸ்மாயில், கருணாகரன், காளிதாஸ், குப்பன்,அர்ஜுனன் ,மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், ஒன்றிய கவுன்சிலர் ஜெயச்சந்திரன், திமுக நிர்வாகிகள் தேர்வாய் முனிவேல், தேர்வழி பாஸ்கரன், கீழ்முதலம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் கே.ஜி.நமச்சிவாயம் ஆகியோர் பங்கேற்றனர்.

Tags : Thirty Festival ,Gumpipundi Government School ,MLA ,D. J.J. Govindarajan , Kummidipoondi Govt. School, Triple Festival, MLA D. J. Govindarajan
× RELATED மதுராந்தகத்தில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல்: எம்எல்ஏ திறந்து வைத்தார்