சென்னை: விண்ணப்பிக்கும் அவகாசம் முடிந்த பின், கூடுதலாக 3 நாட்கள் திருத்தம் ேமற்கொள்ள அவகாசம் வழங்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஷ்வரி தெரிவித்துள்ளார். இது குறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஷ்வரி வெளியிட்டுள்ள அறிவிப்பு: விண்ணப்பதாரர்கள் தங்களது விவரங்களை இணையவழியில் சமர்ப்பிக்கும்போது அறியாமல் சில தகவல்களை தவறாகப் பதிவு செய்கின்றனர். இதனால் ஒரு சில விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகிறது. இதனைத் தவிர்க்க கடைசிநாள் வரைமாற்றிக் கொள்ள வழிவகை செய்துள்ளது.
கடைசிநாள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் பல விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் மாற்றங்கள் செய்ய போதுமான கால அவகாசம் இல்லை என ெதரிவித்துள்ளனர். அதன்படி தேர்வாணையத்தால் இனிவரும் காலங்களில் வெளியிடப்படும் அறிவிக்கைகளுக்கான இணையவழி விண்ணப்பங்களில், விண்ணப்பாதரர்கள் சமர்பித்த விவரங்களை, விண்ணப்பம் சம்ப்பிப்பதற்கான கடைசிநாள் வரை மாற்றிக் கொள்ள வாய்ப்பு அளிப்பதுடன் விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசிநாள் முடிந்த பிறகு நான்கு நாட்கள் கழித்து விண்ணப்ப தகவல்களை சரிபார்த்து மாற்றிக்கொள்ள 3 நாட்கள் வழங்கப்படும். இந்த மூன்று நாட்களில் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் தகவல்களை தவறாக பதிவு செய்திருந்தால் அதனை மாற்றி சரியான தகவல்களை சம்பிக்கலாம். தங்களது விண்ணபத்தினை மீண்டும் ஒருமுறை சரி பார்த்துக் கொள்ளலாம்.
