×

பாஜ கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடம் சாதி ரீதியிலான கேள்வியை எழுப்பியதை கண்டித்து பாஜ பட்டியல் அணி சார்பில் திருவள்ளூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பட்டியல் அணி மாவட்ட தலைவர் சந்தோஷ் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர்கள் திரவியம் பாலா, லஷ்மிகாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டியல் அணி மாநில செயலாளர் செந்தில் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாவட்ட தலைவர் அஸ்வின் (எ) ராஜசிம்ம மகேந்திரா கண்டன உரையாற்றினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் சீத்தாராமன், முல்லை ஞானம், வடிவேல், ஸ்ரீனிவாசன், ஆர்யா சீனிவாசன், ஜெய்கணேஷ், லலிதா பாபு, சங்கீதா, டில்லிபாபு, சண்முகம், திருவள்ளூர் நகர தலைவர் சதீஷ்குமார் மற்றும் நகர தலைவர்கள், ஒன்றிய தலைவர்கள் மற்றும் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதில் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஜாதி அடிப்படையிலான கேள்வி கேட்கப்பட்டதற்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.


Tags : Baja Kandana Demonstration , BJP protest protest
× RELATED எடப்பாடி மீது மாஜி எம்பி கோவை கோர்ட்டில் வழக்கு