×

லண்டனில் டாப்சி நடிக்கும் டன்கி

மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாருக்கான் நடித்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ 2013லும், ‘ஹாப்பி நியூ இயர்’ 2014லும், ‘தில்வாலே’ 2015லும் வெளியானது. இப்படங்கள் ஹிட்டான  நிலையில், அடுத்தடுத்து ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ரயிஸ்’, ‘பேன்’, ‘ஜீரோ’ ஆகிய படங்கள் தோல்வி அடைந்தன. இதனால் சற்று ஓய்வு எடுத்துக்கொண்ட அவர், தற்போது கோலிவுட் டைரக்டர் அட்லி இயக்கும் ‘ஜவான்’ படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். அவரது ஜோடியாக நயன்தாரா பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.

 இதையடுத்து ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ‘டன்கி’ என்ற படத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார்.இந்தியில் ‘முன்னாபாய் எம்பிபிஎஸ்’, ‘திரீ இடியட்ஸ்’, ‘பிகே’, ‘சஞ்சு’ உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கியவர், ராஜ்குமார் ஹிரானி. அவரது ‘டன்கி’ என்ற படத்தில் ஷாருக்கான் ஜோடியாக டாப்சி  நடி க்கிறார். அடுத்த ஆண்டு டிசம்பர் 22ம் தேதி கிறிஸ்துமஸ்சை முன்னிட்டு இப்படம் திரைக்கு வருகிறது. தற்போது இங்கிலாந்து லண்டன் நகரில் வாட்டர்லூ பிரிட்ஜில் படப்பிடிப்பு நடக்கிறது.

ஷாருக்கானுக்கு அடுத்த ஆண்டு மேலும் 2 படங்கள் வெளியாகின்றன. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ‘பதான்’ படத்தில் நடிக்கும் அவருடன் தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் நடித்துள்ளனர். அடுத்த ஆண்டு ஜனவரி 25ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ‘ஜவான்’ படம், அடுத்த ஆண்டு ஜூன் 2ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், சல்மான்கான் நடிக்கும் ‘டைகர்’, ரன்பீர் கபூருடன் அலியா பட் நடிக்கும் ‘பிரம்மாஸ்த்ரா’, ஆமிர் கான் நடிக்கும் ‘லால் சிங் சத்தா’ படங்களில் அவர் கவுரவ வேடம் ஏற்றுள்ளார்.


Tags : Dunki ,Taapsee ,London , Dunki starring Taapsee in London
× RELATED லண்டனில் இருந்து வந்தவருக்கு...