×

அப்துல்லா ஷபிக் அபார சதம்: பாகிஸ்தானுக்கு வெற்றி வாய்ப்பு

காலே: இலங்கை அணியுடனான முதல் டெஸ்டில், 342 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 4ம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 222 ரன் எடுத்துள்ளது.காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 222 ரன், பாகிஸ்தான் அணி 218 ரன் எடுத்து ஆல் அவுட்டாகின. இதையடுத்து 4 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை, 3ம் நாள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 329 ரன் எடுத்திருந்தது.

சண்டிமால் 86 ரன், பிரபாத் 4 ரன்னுடன் நேற்று 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். சண்டிமால் சதத்தை நெருங்கிய நிலையில், பிரபாத் மேற்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் நசீம் ஷா பந்துவீச்சில் கிளீன் போல்டானார். பாகிஸ்தான் 337 ரன்னுக்கு 2வது இன்னிங்சை இழந்தது. சண்டிமால் 94 ரன்னுடன் (139 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் பந்துவீச்சில் முகமது நவாஸ் 5, யாசிர் ஷா 3, ஹசன் அலி, நசீம் ஷா தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து, 342 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 4ம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 222 ரன் எடுத்துள்ளது. இமாம் உல் ஹக் 35, அசார் அலி 6, கேப்டன் பாபர் ஆஸம் 55 ரன்னில் வெளியேறினர். அப்துல்லா ஷபிக் 112 ரன், முகமது ரிஸ்வான் 7 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 7 விக்கெட் இருக்க, பாக். வெற்றிக்கு இன்னும் 120 ரன் தேவை என்ற நிலையில் இன்று பரபரப்பான கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.

Tags : Abdullah Shafiq ,Pakistan , Abdullah Shafiq's brilliant century: Pakistan's chance to win
× RELATED பயங்கரவாதம் சப்ளை செய்த பாகிஸ்தான்...