குடியரசுத் தலைவர் தேர்தல்; 99.18 சதவீதம் வாக்குகள் பதிவு; Air India விமான மூலமாக வாக்கு பெட்டி டெல்லி சென்றது

சென்னை: நாட்டின் 15-வது குடியரசுத் தலைவர் தேர்வு செய்வதற்கான தேர்தலில் நாடு முழுவதும் 99.18 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் வரும் 24-ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில் புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.கள் ஓட்டு போட ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும்  எம்.ஏ.கள் வாக்களிக்க அந்தந்த மாநில தலைமை செயலகத்தில் வாக்கு மையங்கள் அமைத்து ஏற்பாடு செய்யப்பட்டனர்.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற தேர்தலில் முதல் ஆளாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது வாக்கை பதிவு செய்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் நாசர், எதிர் கட்சி துணை தலைவர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை 4.30 மணிக்கு கொரோனா பாதுகாப்பு கவச உடையோடு வந்து வாக்களித்தனர். மேலும் நாகை செல்வராஜ், ஈரோடு கணேஷ மூர்த்தி, கார்த்திக் சிதம்பரம் ஆகிய எம்.பி.கள் சிறப்பு அனுமதி பெற்று சென்னையிலேயே வாக்களித்தனர்.

தமிழகத்தில் 100 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் வாக்களிப்பு முடிந்தவுடன் தமிழக தேர்தல் பார்வையாளர் சீனிவாசன் முன்னிலையில் வாக்குப்பெட்டிக்கு சீழ் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை விமான நிலையம் கொண்டு வரப்பட்டது. அங்கே இருந்து Air India விமான மூலமாக வாக்கு பெட்டி டெல்லி கொண்டு செல்லப்பட்டது. குடியரசுத் தலைவர் தேர்தலில் இந்திய முழுவதும் 99.18 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

Related Stories: