16 மாவட்டத்தினருக்கு நாகர்கோவிலில் அக்னிவீரர் ஆள் சேர்ப்பு: ஜூலை 31க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

நெல்லை: நாகர்கோவிலில் ஆக.21ம் தேதி முதல் செப்.1ம் தேதி வரை அக்னி வீரர் ராணுவ ஆள் சேர்ப்பு பணி நடக்கிறது. இதற்கு வருகிற ஜூலை 31ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு குறுகிய கால ராணுவப் பணியாக அக்னிவீரர் என்ற புதிய திட்டத்தை அறிவித்தது. இந்நிலையில் இதற்கான ஆள் சேர்ப்பு பணி அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி  ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலக அதிகார எல்லைக்குள்  வரும் தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலைச்  சேர்ந்த  தகுதியான விண்ணப்பதாரர்களை அக்னிவீரர் டெக்னிக்கல், அக்னிவீரர் எழுத்தர், அக்னிவீரர் பொதுப்பணி, அக்னிவீரர் டிரேட்ஸ்மேன் ஆகிய வகைகளில் சேர்ப்பதற்காக திருச்சியில் உள்ள ராணுவ ஆள்சேர்ப்பு  அலுவலகம் மூலம் 21.08.2022 முதல் 01.09.2022 வரை கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் ராணுவ ஆள் சேர்ப்புப் பணி நடக்கிறது. இதற்காக பதிவு செய்ய விரும்பும் அனைத்து விண்ணப்பதாரர்களும் மேலே குறிப்பிட்ட வகைகளுக்கு www.joinindianarmy.nic.in  என்ற இணையதளத்தில் 30-07-2022 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என நெல்லை கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

Related Stories: