×

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாவட்ட மாநாடு

திருவள்ளூர்: திருவள்ளூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க 6 வது மாநாட்டில் பத்து வருடங்கள் பணி முடித்த பணி மேற்பார்வையாளர்களை உரிய சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்கிட வேண்டும் உட்பட 11 முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. திருவள்ளூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க 6 வது மாவட்ட மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் சந்தானம் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் மெல்கிராஜா சிங் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ரா.சத்தியமூர்த்தி, மமாவட்ட துணைத் தலைவர் வீரமணி ஆகியோர் முன்னில வகித்தனர். மாவட்ட பொருளாளர் எம்.மகேந்திரன் வரவு செலவு அறிக்கையினை தாக்கல் செய்தார். மாநில பொதுச் செயலாளர் பாரி மாவட்ட மாநாட்டை தொடங்கி வைத்து துவக்க உரையாற்றினார்.

இதில் ஊரக வளர்ச்சித் துறை வளர்ச்சி பணி அலுவலர்கள் சங்க மாநிலத் தலைவர் கென்னடி பூபாலராயன், ஓய்வு பெற்ற திட்ட இயக்குனர் ஸ்ரீதர், மாவட்ட தலைவர் திவ்யா, திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் பிரபு ஆகியோர் கலந்து கொண்டு பேசினார். திரைப்பட பாடல் ஆசிரியர் கவிஞர் ஏகாதேசி, ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் சீ.காந்திமதி நாதன் ஆகியோர் கூட்டத்தில் நிறைவு உரையாற்றினர். இந்த மாவட்ட மாநாட்டில் பத்து வருடங்கள் பணி முடித்த பணி மேற்பார்வையாளர்களை உரிய சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்கிட வேண்டும், ஊராட்சி செயலாளர்களின் மாத ஊதியத்தை முதல் தேதியிலேயே பெறும் வகையில் கருவூலம் மூலம் ஊதியத்தை வழங்கிட வேண்டும், திருவள்ளூரில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும், புறவழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க தமிழக அரசை கேட்டுக்கொள்வது உள்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags : District Conference of Rural Development Officers Association , District Conference of Rural Development Officers Association
× RELATED இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு...