×

சுஷ்மிதா மீது எழுத்தாளர் கடும் தாக்கு

மும்பை: நடிகை சுஷ்மிதா சென் (46), பண மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய லலித் மோடி (56) இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் வெளியான நிலையில், வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் பெங்காலி மொழியில் வெளியிட்டுள்ள பதிவு: சுஷ்மிதா சென்னை கொல்கத்தா விமான நிலையத்தில் சந்தித்தேன். என்னை கட்டிப்பிடித்தார். நான் ஆச்சரியப்பட்டேன். காரணம், இளம் வயதில் 2 பெண் குழந்தைகளை அவர் தத்தெடுத்ததுதான். இதனால் அவர் மீது அதிக மரியாதை ஏற்பட்டது.

அவரது நேர்மை, துணிச் சல், தன்னம்பிக்கை, விடாமுயற்சியை மனம் திறந்து பாராட்டினேன். இந்நிலையில், ஐபிஎல் போட்டியின் தந்தையை (லலித் மோடி) பணத்துக்காக அவர் (சுஷ்மிதா சென்) காதலித்திருக்க லாம். பல்வேறு குற்றங்களில் தொடர்புடைய பொறுப்பற்ற ஒரு நபருடன் அவர்  நேரத்தை செலவிடு கிறார் என்று தெரிகிறது. பணத்துக்காக அவர் (சுஷ்மிதா) வாங்கப்பட்டாரா? என்றாலும், அந்த நபரை சுஷ்மிதா காதலிப்பதாக எனக்கு தெரியவில்லை.



Tags : Sushmita , The writer attacked Sushmita
× RELATED சுஷ்மிதா சென் – ரோஹ்மன் பிரிந்த...