×

ஆகஸ்ட் மாத இறுதியில் பென்ஷனை மீட்டெடுக்கும் மாநில மாநாடு: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

சென்னை: பள்ளிக் கல்வியில் உள்ள அதிகாரிகள்- ஆசிரியர் விரோதப் போக்கை கண்டிக்கும் வகையில் ஆகஸ்ட் 5ம் தேதி ஜாக்டோ-ஜியோ சார்பில் மாவட்டங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது. ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சென்னையில்,தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தில் நடந்தது. ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் தாஸ், அன்பரசு, தியாராஜன் ஆகியோர் கூட்டுத்  தலைமை ஏற்றனர்.  

அதில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றில் இருந்து விரைவில் பூரண நலம் பெற்று மக்கள் நலப் பணியாற்ற வேண்டும். ஒன்றிய அரசு 1.1.22 முதல் வழங்கிய 3 சதவீத அகவிலைப்படியை உடனடியாக முன்தேதியிட்டு வழங்கவும், காலவரையின்றி முடக்கப்பட்டுள்ள சரண்விடுப்பை வழங்க வேண்டும். பள்ளிக் கல்வித்துறையில் அதிகாரிகள்- ஆசிரியர் விரோதப் போக்கை கண்டித்தும் முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் ஆகஸ்ட் 5ம் தேதி ஜாக்டோ-ஜியோ சார்பாக மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். பழைய ஓய்வு ஊதியதிட்டத்தை மீட்டெடுக்க போராடிப் பெற்ற சரண் விடுப்பை திரும்ப பெறவும், ஒன்றிய அரசின் அகவிலைப் படியை  உடனுக்குடன் பெறவும் ஆகஸ்ட் மாத இறுதியில்‘பென்ஷனை மீட்டெடுக்கும் ஜாக்டோ-ஜியோ மாநில மாநாடு சென்னையில் நடத்தப்படும். இந்த மாநாட்டுக்கு முதல்வரை அழைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Jacto-Jio , State conference to restore pension at the end of August: Jacto-Jeo announcement
× RELATED ஜாக்டோ-ஜியோ கோரிக்கை ஆசிரியர், அரசு...