×

காஷ்மீரில் அத்துமீற பறந்த ட்ரோனை எல்லை பாதுகாப்பு படையினர் மற்றொரு ட்ரோன் மூலம் தீவிர தேடல்

காஷ்மீர்: காஷ்மீர் மாநிலத்தில் அத்துமீற பறந்த ட்ரோனை எல்லை பாதுகாப்பு படையினர் மற்றொரு ட்ரோன் மூலம் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் ட்ரோன் ஊடுருவல் போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது.

இந்த அத்துமீறல்களை தடுக்கும் விதமாக எல்லை காவல் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சம்பா மாவட்டத்தில் உள்ள மங்கு சக் என்ற கிராமத்தில் நேற்றிரவு ட்ரோன் ஒன்று அத்துமீறி பறந்து சென்றுள்ளது.

இதைக்கண்ட கிராம மக்கள் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். இதைதொடர்ந்து போலீசார் அப்பகுதியில் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். இரவு நேரம் என்பதால் ட்ரோன் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை.

இதையடுத்து இன்று காலை அப்பகுதியில் எல்லைப்பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து ஒரு ட்ரோனை பறக்க விட்டுள்ளனர். அதன் மூலம் அப்பகுதியில் தீவிரவாதிகள் யாரேனும் பதுங்கியுள்ளனரா, இல்லை வேறு ட்ரோன் அப்பகுதியில் பறக்கிறாத என்று தீவிர தேடுதலில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.

Tags : Border Security Forces ,Kashmir , Border Security Force conducts intensive search for trespassing drone in Kashmir with another drone
× RELATED குங்குமப்பூவின் நன்மைகள்!