ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த பக்தர்கள்

ராமேஸ்வரம்: வரம் விடுமுறை மற்றும் ஆடி மாதம் முதல் நாளையொட்டி  ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையிலும் நீண்ட வரிசையில் காத்திருந்த 22 புண்ணிய தீர்த்தங்களிலும் பக்தர்கள் புனித நீராடினார். ராமேஸ்வரத்துக்கு  நாள் தோறும் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வராது வழக்கம்.

இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை வரம் விடுமுறை மற்றும் ஆடி மாதம் முதல் நாளையொட்டி வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து வந்துருந்த ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே அக்னி தீர்த்த கடற்கரையில் புனிதநீராடி வருகின்றனர்.

பின்னர் ராமநாத சுவாமி திருக்கோவிலில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடி வருகின்றனர். அதன் பின்னர் ராமநாத சுவாமி வரதராபத்தினி அம்மனை வழிபாடு பக்தர்கள் செல்கின்றனர். 

Related Stories: