×

ட்வீட் கார்னர்... அம்மா ஷரபோவா!

ரஷ்ய டென்னிஸ் நட்சத்திரம் மரியா ஷரபோவா (35 வயது) - இங்கிலாந்து தொழிலதிபர் அலெக்சாண்டர் கில்கெஸ் (42 வயது) தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஜூலை 1ம் தேதி பிறந்த தங்கள் மகனுக்கு தியோடர் என பெயரிட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஷரபோவா பதிந்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. 17 வயதில் விம்பிள்டன் சாம்பியன் பட்டம் (2004) வென்ற ஷரபோவா, 2006ல் யுஎஸ் ஓபன், 2008ல் ஆஸி. ஓபன், 2012 மற்றும் 2014ல் பிரெஞ்ச் ஓபன் என 4 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளிலும் பட்டம் வென்று ‘கேரியர் கிராண்ட் ஸ்லாம்’ சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Sharapova , Tweet Corner... Mother Sharapova!
× RELATED ரஷ்ய டென்னிஸ் நட்சத்திரம் : மரியா ஷரபோவா ஓய்வு