×

நீர்வரத்து 8,143 கனஅடியாக அதிகரிப்பு, பெரியாறு அணை நீர்மட்டம் 133 அடியை கடந்தது

கூடலூர்: முல்லை பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று காலை வினாடிக்கு 5258 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 8143 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் நேற்று 130.85 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 133.20 அடியாக உயர்ந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி, 152 அடி உயரமுள்ள பெரியாறு அணையின் நீர்மட்டம் 133.20 அடியாக இருந்தது.
அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8143 கனஅடியாகவும், அணையிலிருந்து தமிழக பகுதிக்கு வினாடிக்கு 1789 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்புநீர் 5456 மில்லியன் கனஅடியாக உள்ளது.

71 அடி உயரமுள்ள வைகையின் நீர்மட்டம் 56.55 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1695 கனஅடியாகவும், அணையிலிருந்து வினாடிக்கு 969 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்புநீர் 2975 மில்லியன் கனஅடியாக உள்ளது. 126.28 அடி உயரமுள்ள சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 72.32 அடியாக உள்ளது.

அணைக்கு நீர்வரத்து இல்லை. அணையிலிருந்து வினாடிக்கு 6 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்பு நீர் 32.08 மில்லியன் கனஅடியாக உள்ளது. 57 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.20 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்தும், நீர் வெளியேற்றமும் இல்லை. அணையின் இருப்புநீர் 324.54 மில்லியன் கனஅடியாக உள்ளது.  பெரியாறு அணை பகுதியில் 84.6 மி.மீ., தேக்கடியில் 31.2 மி.மீ., கூடலூரில் 14.2 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.

Tags : Periyaru dam , Water flow increased to 8,143 cubic feet, Periyar dam water level crossed 133 feet
× RELATED பெரியாறு அணையிலிருந்து வரும்...