×

செல்பி வித் அண்ணா என்ற போட்டி: கல்லூரி பேராசிரியர் மற்றும் மாணவிகளிடம் பாஜகவினர் வாக்குவாதம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வரும் 17ம் தேதி பாஜகவின் தாமரை மாநாடு நடைபெறயுள்ளது இதனையொட்டி பாரதிய ஜனதா கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் செல்பி வித் அண்ணா என்ற போட்டி நடத்தப்படுவதாகவும் அதில் பங்கு பெற்று வெற்றி பெறும் மாணவர்கள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் புகைப்படம் எடுத்து கொள்ளலாம் எனவும் பாஜக-வில் இணைந்து தேசத்தின் கரத்தை வலுப்படுத்த வாருங்கள் எனவும்  இதற்கான உறுப்பினர் சேர்க்கைக்கு  முகாம் திருப்பூரில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மற்றும் பல்லடம் சாலையில் உள்ள எல்.ஆர்.ஜி பெண்கள் கலைக்கல்லூரி ஆகிய இரண்டு கல்லூரிகளில் நடைபெறும் என விளம்பரம் செய்யப்பட்டது.

இந்த விளம்பரத்தை அறிந்த இரண்டு கல்லூரி முதல்வர்கள் இதற்கும் எங்கள் கல்லூரிக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்று கூறியுள்ளார். தங்களிடம் அனுமதி பெறப்படாமல் கல்லூரியின் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் , காவல் மாநகர காவல் ஆணையர், கோவை மண்டல கல்வி இயக்குனருக்கும் இரண்டு கல்லூரி முதல்வரும் கடிதம் அனுப்பியுள்ளனர்.  காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர். இதனிடையே பல்லடம் சாலையில் உள்ள எல்.ஆர்.ஜி கல்லுரிக்கு சென்ற பாஜகவினர் கல்லூரி வளாகத்தின் வெளியே பிரச்சாரத்தில் ஈடுபட முயன்று உள்ளனர்.

இதையடுத்து தகவல் அறிந்து கல்லூரி நிர்வாகத்தினர் முன்பக்க கதவை திறக்காமல் கல்லூரியின் தேர்வு முடித்த மாணவிகளை பின்பக்க வழியாக வெளியே அனுப்பியபோது பாஜகவினர் கல்லூரிக்கு அத்துமீறி நுழைந்து பேராசிரியர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து காவல் துறையினர் கல்லூரிக்கு சென்று பாஜகவினர் மற்றும் பேராசிரியர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுனர். அதன்பிறகு முன்பக்க கதவு திறக்கப்பட்டதும் பாஜகவினர் பிரசாத்தை மேற்கொண்டனர்.

அப்போது கல்லூரி முடிந்து வெளியே வந்த மாணவிகளிடம் செல்பி வித் அண்ணா என்ற நிகழ்ச்சி குறித்து பரப்புரையில் ஈடுபட்டனர். இதில் சில மாணவிகள் பாஜகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கல்லூரி முன்பு இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் இதனால் எங்களால் படிக்க முடியவில்லை என்றும் கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த பகுதியில் அனுமதியின்றி பிரச்சாரம் நடத்தியதால் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடனடியாக கலைந்து செல்லுமாறு பாஜகவினரை அறிவுறுத்தினர்.

Tags : Anna ,Bajakavini , Selfie with Anna contest, BJP members argue , college professor ,students
× RELATED சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு