×

சங்கரய்யாவுக்கு முதலமைச்சா் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவா் சங்கரய்யாவுக்கு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தொிவித்தாா். இது குறித்து முதல்வா் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், பொதுவுடைமைச் சிந்தனை எனும் கலங்கரை விளக்கத்தை அடுத்த தலைமுறையினருக்கு அடையாளம் காட்டும் தகைசால்தமிழர் தோழர். சங்கரய்யா அவர்களுக்கு, 101-வது பிறந்தநாளில் உங்களில் ஒருவனாக வாழ்த்துகளைப் பகிர்கிறேன்! போராட்டங்களும் தியாகங்களும் நிறைந்த அவர் இன்னும் பல்லாண்டு வாழ்க! என பதிவிட்டுள்ளாா்.

Tags : Shankaraiah , Shankaraiya. Chief Minister, happy birthday
× RELATED சுதந்திர போராட்ட வீரரும்,...