×

சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன் காலிறுதியில் சாய்னா, சிந்து: பிரணாய் முன்னேற்றம்

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன் போட்டியில் நேற்று காலிறுதிக்கு முந்தைய 2வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய், சீன தைபே வீரர் சோ டின் சென் உடன் மோதினார். அதில் பிரணாய் ஒரு மணி 9 நிமிடங்கள் கடுமையாக போராடி 14-21, 22-20, 21-18 என்ற செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். அதே நேரத்தில் முதல் சுற்றில் கிடாம்பி ஸ்ரீகாந்தை வென்ற இந்திய வீரர் மிதுன் மஞ்சுநாத் 2வது சுற்றில் தோல்வி அடைந்தார். மகளிர் ஒற்றையர் பிரிவில் பல போட்டிகளுக்கு பிறகு முதல் சுற்றில் வெற்றிக் கண்ட சாய்னா நெஹ்வால் 2வது சுற்றில் சீன வீராங்கனை ஹி பிங் ஜியோ உடன் விளையாடினார். அதில் சாய்னா 58நிமிடங்கள் போராடி 21-19, 11-21, 21-17 செட்களில் வெற்றிப் பெற்று நீண்ட நாட்களுக்கு பிறகு சர்வதேச ஆட்டத்தில் காலிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். பி.வி.சிந்து நேற்று வியட்நாம் வீராங்கனை துய் லின் குயென் உடன் களம் கண்டார். அதில் சிந்து  ஒரு மணி 26 நிமிடங்கள் கடுமையாக போராடி 19-21, 21-19, 21-18 என்ற செட்களில் வென்று காலிறுதிக்குள் நுழைந்துள்ளார். அதே நேரத்தில் மற்றொரு இந்திய வீராங்கனை அஷ்மிதா 2வது சுற்றில் வெளியேறினார்.  ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அர்ஜூன், துருவ் கபிலா இணையும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

Tags : Saina ,Sindhu ,Singapore Open Badminton ,Pranai , Saina, Sindhu in Singapore Open Badminton quarterfinals: Pranai's progress
× RELATED 2024-2025ம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்...