×

அதிமுகவின் தற்போதைய நிலையை கண்டு வருந்துகிறேன்: நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ பேட்டி

நெல்லை: அதிமுகவின் தற்போதைய நிலையை கண்டு வருந்துகிறேன் என்று  பா.ஜ. எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறினார். நெல்லையில் நேற்று பாஜ எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் அளித்த  பேட்டி: எம்ஜிஆர்  உருவாக்கிய அதிமுக இயக்கம் நிலையாக இருக்க அனைவரும் ஒற்றுமையாக இருக்க  வேண்டும் என்பதுதான் பா.ஜ.வின் விருப்பம்.
 
அதிமுக உள்கட்சி விவகாரங்களில்  பா.ஜ. தலையிடாது.  அதிமுகவின் தற்போதைய நிலையை கண்டு மனம் வருந்துகிறேன். சட்டம் ஒழுங்கு சீர்கெடும் சம்பவங்களால் அதன்  தலைமை அலுவலகத்தை சீல் வைக்கும் நிலைக்கு கொண்டு வந்திருக்க கூடாது. அதிமுகவிலிருந்து பா.ஜ.விற்கு நான்  யாரையும் அழைக்கவில்லை. நான் அழைத்திருந்தால் அதிகமானவர்கள் பா.ஜ.வில்  இணைந்திருப்பார்கள். ஓபிஎஸ் - இபிஎஸ் இணைந்திருப்பது எதிர் வரும் காலங்களில்  கூட்டணி கட்சிகளுடன் தேர்தலை எதிர்கொள்வதற்கு நல்வாய்ப்பாக அமையும். அக்கட்சியின் வருங்காலம் வளமையாக  அமையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : AIADMK ,Nayanar Nagendran ,MLA , Sad to see the current state of AIADMK: Nayanar Nagendran MLA interview
× RELATED நயினார் நாகேந்திரன் கொடுத்த பணம்...