×

உடல்நலம் சீரடைந்து மக்கள் பயணம் தொடர வாழ்த்துகிறேன்: முதல்வருக்கு, காதர் மொய்தீன் கடிதம்

திருச்சி: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தாங்கள் எல்லா நலமும் எல்லா சிறப்பும் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்து உயர்ந்திட வாழ்த்துகிறோம். நோயற்ற பெருஞ் செல்வம் தங்களுக்கு எவ்வித குறையும் இன்றி நிறைவாக பெருகிட இறையருளை வேண்டுகிறேன். ஓயாத உழைப்பு, நாட்டு மக்களை பற்றியே உன்னிப்பு, ஊரும் உலகமும் ஏற்று போற்றும் படியான ஆக்கம், நல்லது நாளெல்லாம் நடக்கும் போது பொறாமைக்காரர்களின் புகைச்சலும் ஏற்படும்.

அது யாவும் உதயசூரியன் முன் உதிரும் பனித்துளியாகி விடும். எண்ணியாங்கு பயணத்தை தொடர எவ்வித இடைஞ்சலும் குறுக்கிடாது தங்களின் நல்வாழ்வில், இடையில் வரும் சிறு இடைஞ்சலும் இல்லாது போகும். நல்லது செய்யும் நல்லுள்ளம் நாளெல்லாம் தனது நல வாழ்வை தொடரும். தங்களின் பேரும் புகழும் எங்கும் படரும். உடலை வளர்த்தேன், உயிர் வளர்த்தேன் என்றார் திருமூலர். தங்களின் அன்பு இல்லத்தில் உள்ள அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். ஓய்வு மிக மிக முக்கியம். ஓய்வு எடுப்பாரே உயர சென்று உலக மாந்தரின் உள்ளங்களில் நீங்காமல் நின்றுள்ளனர். தங்களின் உடல் நலம் விரைவில் சீரடையும், சிறப்பு பயணம் தொய்வு எதுவுமின்றி தொடரவும் வாழ்த்துகிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.



Tags : Kadar Moydeen , I wish the people good health and safe travels: Letter to the Prime Minister, Qader Moideen
× RELATED திமுக கூட்டணியில் கேட்ட 3 தொகுதிகள் கிடைத்துள்ளது.: காதர் மொய்தீன் பேட்டி