×

மக்கள் அனைவரும் பாராட்டுவதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சிறப்பு: அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

பெரம்பூர்: பொதுமக்கள் அனைவரும் பாராட்டுவதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சிறப்பு என்று அமைச்சர் வேலு பேசினார். சென்னை கிழக்கு மாவட்டம் திருவிக. நகர் தெற்கு பகுதி 75, 76 வட்ட திமுக சார்பில், கலைஞரின் 99வது பிறந்த நாளை முன்னிட்டு வேருக்கு விழா 37வது நிகழ்வாக முத்தமிழ் மொழியரங்கம் என்ற தலைப்பில்  75வது வட்டச் செயலாளர் சசிகுமார் தலைமையில் நடைபெற்றது.

 இதில் அமைச்சர் எ.வ.வேலு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான பி.கே.சேகர்பாபு, சென்னைமாநகராட்சி மேயர் பிரியா, கலாநிதி வீராசாமிஎம்பி தாயகம் கவி எம்எல்ஏ உள்பட பலர் கலந்துகொண்டனர்.இதில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது;கலைஞர், முத்தமிழான இயல், இசை, நாடகம் அறிந்தவர். தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளான அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற நோக்கத்தை நிறைவேற்றினார். ஒரு கோயிலுக்கான கட்டுமான பணியில் அடிக்கல் நாட்டுவதில் இருந்து, இறுதி கட்டம் முடிவடைந்து குடமுழுக்கு, யாகம் நடத்தும் வரை நம்மவர்கள் தேவை, ஆனால் கையில் தட்டு ஏந்தி கற்பூரம் காட்ட அவர்கள் தேவையில்லை என்பதை உடைத்ததுதான் திராவிடம் மாடல் ஆட்சி.

நாங்கள் ஆன்மீகத்திற்கு விரோதிகள் அல்ல. மக்கள் அனைவரும் பறைசாற்றக்கூடிய வகையிலேயே திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. அனைவரும் பாராட்டுவதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சிறப்பு. அண்ணா, கலைஞர் ஆகியோரின் வழியில் வந்த இயக்கம். அதற்கு சான்றாகத்தான் சென்னையில் அண்ணாவின் நூற்றாண்டு நூலகம் உள்ளது. அதேபோல் மதுரையில் கலைஞரின் பெயரிலும் நூற்றாண்டு நூலகம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.

Tags : Dravidian ,Minister ,AV ,Velu , The specialty of Dravidian model government is that people appreciate it: Minister AV Velu's speech
× RELATED ஸ்டாலினின் குரலில் துவங்கி எல்லோரும்...