×

‘விபத்தில் சிக்கிய கணவர், கிட்னி பிரச்னையில் மகன்’ மாட்டுவண்டியில் உப்பு, செம்மண் விற்று; குடும்பத்தை காப்பாற்றும் பெண்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் படவேட்டில் வசிப்பவர் சேகர் (50). இவரது மனைவி அலமேலு(43), இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இருவரும் பட்டதாரிகள். குறவர் சமூகத்தை சேர்ந்த இவர்கள் படவேடு பாலம் அருகே குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களில் மகளுக்கு கடந்த ஆண்டு திருமணமாகி விட்டது. சேகரும், அலமேலுவும் கடந்த 19 ஆண்டுகளாக படவேட்டை சுற்றி உள்ள கிராமங்களுக்கு மாட்டு வண்டியில் சென்று உப்பு, கோலமாவு, செம்மண், கோலக்கட்டி, சோப்பு உள்ளிட்டவற்றை விற்றுவருகின்றனர்.

இந்நிலையில் விபத்தில் சிக்கிய சேகர் வீட்டிலேயே இருந்து வருகிறார். இவர்களது மகனுக்கும் கிட்னி ஆபரேஷன் செய்யப்பட்டிருப்பதால் எந்த வேலைக்கும் செல்ல முடியாமல் அவரும் வீட்டிலேயே இருந்து வருகிறார். இதனால் அலமேலு மட்டுமே தினமும் தனது மாட்டு வண்டியில் சென்று வியாபாரம் செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். இதுகுறித்து அலமேலு கூறுகையில், ‘கடந்த 19 ஆண்டுகளாக மாட்டு வண்டி மூலம் ஊர்ஊராக சென்று விற்பனை செய்து வருகிறேன். எனக்கு கிராம மக்களுடன் நல்ல நட்பு உள்ளதால் என்னிடம் விரும்பி பொருட்களை வாங்குகின்றனர்.

உப்பு விற்று மிகவும் கஷ்டபட்டு என் பிள்ளைகளை பட்டதாரிகளாக்கினோம். ஆனால் அவர்களுக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. மகனுக்கு சிறுநீரக பிரச்சனை உள்ளதால் வெளியே சென்று வேலை செய்ய முடியாமல் உள்ளான். எனவே எங்களுக்கு மாவட்ட நிர்வாகம் பென்ஷன் உள்ளிட்ட அரசு நலத்திட்டங்களை வழங்கினால் உதவியாக இருக்கும்’ என தெரிவித்தார்.

Tags : Kidney Prachnay , 'Husband caught in an accident, son with kidney problem' selling salt and semman in a bullock cart; The woman who saves the family
× RELATED முல்லைப்பெரியாறில் இருந்து தண்ணீர் திறப்பு