×

துணைநடிகர் ராமராஜ் உடல்நலக்குறைவால் நேற்று இரவு காலமானார்

ராமநாதபுரம்: துணைநடிகர் ராமராஜ் உடல்நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். அவரது உடல் சொந்த ஊரில் இன்று மாலை தகனம் செய்யப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள மேலச்சாக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ராமராஜ்(72). இவர் முதுகுளத்தூரிலுள்ள ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் கிளை மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இதன்பிறகு சினிமா இயக்குனர் பாலாவின் அறிமுகம் கிடைத்தது. தொடர்ந்து 2011ல் வெளிவந்த அவன் இவன் சினிமாவில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து நடிகர் அஜித் நடித்த வீரம், சசிக்குமார் நடித்த  தாரைதப்பட்டை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக முதுகுளத்தூர் பகுதியில் படம் பிடிக்கப்பட்டு விரைவில் வெளியாக உள்ள நடிகர் பாக்கியராஜ் மகன் சாந்தனு நடித்த ராவணகூட்டம், நடிகர் சசிக்குமாரின் காரி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் டிவி சீரியல் தொடர்களிலும் நடித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் காலமானார். அவரின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் முதுகுளத்தூர் கொண்டுவரப்பட்டு அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சினிமாத்துறையினர், முக்கிய பிரமுகர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மாலையில் சொந்த கிராமமான மேலச்சாக்குளத்தில் உடல் தகனம் செய்யப்படுகிறது. இவருக்கு மனைவி, 3 மகன்கள் உள்ளனர்.

Tags : Ramaraj , Actor Ramaraj passed away last night due to ill health
× RELATED கடமலை அருகே கிணறு பைப்லைனை சேதப்படுத்திய யானைகள்