திருப்பூர் ரயில் நிலையம் அருகே பள்ளி மாணவர்கள் கற்களை வீசி மோதல்

திருப்பூர்: திருப்பூர் ரயில் நிலையம் அருகே பள்ளி மாணவர்கள் கற்களை வீசி மோதிகொண்டனர்.

தடுக்க முயன்ற நபரையும் மாணவர்கள் தாக்கியதால் உடன் சென்ற நபர்கள் மாணவர்களை தாக்கிய காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் ரயில் நிலையம் அருகே பேருந்து நிறுத்தத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து சண்டை நடந்து வந்துள்ளது. இன்று  பள்ளி மாணவர்கள் ஒருவரை ஒருவர் கற்களை  வீசி தாக்கி உள்ளனர். இதனை கண்ட நபர் ஒருவர் மாணவர்களை தடுக்க முயன்றுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் தடுக்க முயன்றவரையும் அவருடன் வந்த நபர்களையும்  துரத்தி துரத்தி தாக்கி உள்ளனர். சிறிது தூரம் ஓடிய நபர்கள் அந்த பகுதியில் இருந்த கட்டைகளை எடுத்து மாணவர்களை தாக்கி உள்ளனர். தகவலறிந்து விரைந்து சென்ற திருப்பூர் வடக்கு போலீசார் மாணவர்களில் சிலரை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று பெற்றோரை வரவழைத்து எச்சரித்து அனுப்பினர்.  இந்த தாக்குதல் சம்பவத்தை அந்த பகுதியில் இருந்த சிலர் வீடியோவாக எடுத்துள்ளனர். இந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: