×

தேமுதிக உட்கட்சி தேர்தல் விண்ணப்ப கட்டணம் எவ்வளவு; விஜயகாந்த் அறிவிப்பு

சென்னை: தேமுதிக உட்கட்சி அமைப்பு தேர்தலுக்கான புதிய விண்ணப்ப படிவத்தினை பெற்று அதனை  புதுப்பித்து தர வேண்டும் என்று உறுப்பினர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேமுதிக உள்கட்சி தேர்தல் தொடர்பான தேமுதிக உட்கட்சி தேர்தல் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2017ம் ஆண்டு கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. 5 ஆண்டுகள் கழித்து மீண்டும் தேமுதிகவில் அமைப்பு தேர்தல் குக்கிராமங்களில் உள்ள ஊராட்சி வாரியாக பூத் கிளையில் தொடங்கி ஊராட்சி, பேரூர் வார்டு, நகர வார்டு பூத் கிளை, நகர வார்டு, மாநகராட்சி வட்டங்களில் உள்ள பூத் கிளை, பேரூராட்சி, நகராட்சி, ஒன்றியம், மாவட்டம், தலைமை என அனைத்து பகுதிகளில் உள்ள கமிட்டிகளுக்கும் தேர்தல் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆலோசனை கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆகஸ்ட் 25ம் தேதி விஜயகாந்தின் 70வது பிறந்த நாளை தேமுதிக சார்பில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட முடிவு எடுக்கப்பட்டது. மேலும், பிறந்த நாளிற்கு முன்பாகவே உட்கட்சி தேர்தலை நடத்தி முடித்து தேர்தலில் வெற்றி பெறும் நிர்வாகிகள் பிறந்தநாளின் போது விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற ஆலோசிக்கப்பட்டது.

வருகின்ற 10ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை தமிழ்நாட்டில் அனைத்து ஒன்றியங்களில் உள்ள ஒன்றிய ஊராட்சி பூத் கிளைகள், பேரூராட்சி வார்டு கிளை, நகராட்சி வார்டு பூத் கிளை, நகராட்சி வார்டு, மாநகராட்சி வட்டங்களில் உள்ள பூத் வாரியாக கிளைகளுக்கு பூத் கிளை செயலாளர், பூத் அவை தலைவர், பூத் பொருளாளர், இரண்டு பூத் துணை செயலாளர்கள், 2 பிரதிநிதிகள், 2 பூத் செயற்குழு உறுப்பினர்கள் கொண்ட ஒன்பது கிளை நிர்வாகிகள், ஊராட்சி, ஊராட்சி செயலாளர், இரண்டு துணை செயலாளர்கள், மாநகராட்சி வட்டத்திற்கு ஒரு வட்ட செயலாளர், அவைத்தலைவர், பொருளாளர், நான்கு துணை செயலாளர்கள், நான்கு பகுதி பிரதிநிதிகள் கொண்ட 11 பேர், இவை அனைத்திற்கும் முதல் கட்ட அமைப்பு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரண்டாம் கட்ட அமைப்பு தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தேமுதிக தலைமை தெரிவித்துள்ளது. தற்போது உறுப்பினர்கள் உட்கட்சி அமைப்பு தேர்தலுக்கான புதிய விண்ணப்ப படிவத்தினை பெற்று அதனை புதுப்பித்து தர வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கான விண்ணப்ப கட்டணங்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய உறுப்பினர்களுக்கு ரூ.75, ஒன்றிய கழகத்திற்கு ரூ.500,  மாவட்ட அமைப்பு தேர்தலுக்கு ரூ.3000 என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  அனைத்து உறுப்பினர்களும் புதிய உறுப்பினர் படிவத்தை பெற்று புதுப்பிக்க வேண்டும். உட்கட்சி தேர்தலில் போட்டியிடும் அனைத்து பதவிகளுக்கும் தாங்கள் வசிக்கின்ற இடத்தில் கிளை கழகத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும் என்று விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

Tags : DMK ,Vijayakanth , How much is the application fee for DMK internal elections; Vijayakanth announcement
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...