×

சேரன்மகாதேவி பூதத்தான்குடியிருப்பு பொன்பெருமாள் சாஸ்தா கோயில் கும்பாபிஷேக விழா

வீரவநல்லூர்: சேரன்மகாதேவியை அடுத்த பூதத்தான்குடியிருப்பு பொன்பெருமாள் சாஸ்தா கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்களுடன் கும்பாபிஷேகம் விழா துவங்கியது. யாகசாலை பூஜைகளுடன் சாமி சன்னதி முன்பு சபரிமலை மேல்சந்தி பிரம்ம ஸ்ரீசுதீர் நம்பூதிரி சிறப்பு பூஜை நடத்தினார்.

கும்பாபிஷேக நாளான நேற்று முன்தினம் காலை 6.30 மணிக்கு மேல் மூலவர் விமானத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் சாஸ்தா மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்கார தீபாரதனையும் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : Serenmahadevi ,Bonperumal Shasta Temple Kumbaphisheka Festival , Kumbabhishekam Ceremony of Cheranmahadevi Bhuthathankudiripu Ponperumal Shasta Temple
× RELATED கிண்டி, மீனம்பாக்கத்தில் கோடை வெயில் உக்கிரத்தில் 2 இடங்களில் தீ விபத்து