×

இத்தனை ஆண்டுகளாக ஓ.பன்னீர்செல்வதுடன் பயணித்தது வெட்கமாகவும், வேதனையாகவும் உள்ளது: அதிமுக மாஜி அமைச்சர் கே.பி.முனுசாமி பேட்டி

சென்னை: இத்தனை ஆண்டுகளாக ஓ.பன்னீர்செல்வதுடன் பயணித்தது வெட்கமாகவும், வேதனையாகவும் உள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்திருக்கிறார். அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்னை எழுந்ததில் இருந்து ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மோதல் போக்கு உருவானது. தற்போது இந்த மோதல் போக்கு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அதிமுகவை கைப்பற்றும் வகையில் 2 பேரும் தனித்தனியாக உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்துக்கு சென்று வழக்கு தொடுத்து வருகின்றனர். இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, கோடநாடு வழக்கு விவகாரத்தில் தனது மகனையே அம்பாக எய்தி பேச வைக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.

4 ஆண்டுகளாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு இது தெரியவில்லையா? என கேள்வி எழுப்பினார். இத்தனை ஆண்டுகளாக ஓ.பன்னீர்செல்வதுடன் பயணித்தது வெட்கமாகவும், வேதனையாகவும் உள்ளது. பன்னீர்செல்வதுடன் இணைந்து செயல்பட்டபோது நடந்த சம்பவங்கள் ஒன்றைக்கூட வெளியே சொல்லமாட்டேன். ஓ.பன்னீர்செல்வம், சுயநலமாக செயல்படுகிறார் என கே.பி.முனுசாமி குற்றம்சாட்டினார். அதிமுகவின் தலைமை பொறுப்புக்கு எடப்பாடி பழனிசாமி வருகிறார் எனவும் தெரிவித்தார். ஓபிஎஸ் மீது கட்சி விரோத நடவடிக்கை? என்ற கேள்விக்கு ஜனநாயகப்படி கட்சி செயல்பாடுகள் இருக்கும் என கே.பி.முனுசாமி பதில் அளித்துள்ளார்.


Tags : O. Panneerselvath ,AIADMK ,minister ,KP Munusamy , O. Panneerselvam, Shame, Pain, KP Munusamy
× RELATED அதிமுக ஆட்சியிலும் கல்வராயன் மலையில்...