×

டிவிட்டரை வாங்குவதற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்த எலான் மஸ்க்: வழக்கு தொடரப்போவதாக டிவிட்டர் நிறுவனம் அறிவிப்பு

சான் பிரான்சிஸ்கோ: சமூக வலைதள நிறுவனமான டிவிட்டரை வாங்குவதற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தை எலான் மஸ்க் ரத்து செய்துள்ளார். உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் சமூகவலைதளமான டுவிட்டரை வாங்க முடிவு செய்தார். இதையடுத்து, 44 பில்லியன் டாலர்களுக்கு டுவிட்டரை எலான் மஸ்கிடம் விற்க டிவிட்டர் நிர்வாகம் கடந்த ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் செய்தது.

இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு டிவிட்டர் நிறுவன பங்குகளை எலான் மஸ்கிற்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வந்தது. இதற்கிடையே, டிவிட்டரில் உள்ள போலி கணக்குகள், பயன்படுத்தப்படாத நிலையில் உள்ள கணக்குகள் உள்பட சில விவரங்களை தரும்படி டிவிட்டர் நிர்வாக குழுவிடம் எலான் மஸ்க் கோரிக்கை விடுத்தார். ஆனால், இரண்டு மாதங்களாகியும் எலான் மஸ்க் கேட்ட விவரங்களை தர டிவிட்டர் நிறுவனம் மறுத்து வந்தது.

இந்நிலையில், டிவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் இன்று அதிரடியாக அறிவித்தார். பொலி கணக்குகள் கேட்ட தகவல்களை டிவிட்டர் நிறுவனம் தரதாலும், ஒப்பந்தப்படி செயல்படாததாலும் டிவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

டிவிட்டரை வாங்கும் திட்டத்தை எலான் மஸ்க் கைவிட்ட நிலையில் அவர் மீது வழக்குத்தொட உள்ளதாக டிவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்ட டிவிட்டரை வாங்கும் திட்டத்தை எலான் மஸ்க் கைவிட்ட சம்பவம் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Elan Musk ,Twitter , Twitter, contract cancellation, Elon Musk,
× RELATED இந்தியாவில் தற்போதைக்கு டெஸ்லா...