விபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மெட்ரோ ரயில் நிர்வாக கட்டிடத்தில் பேரிடர் மீட்பு குழுவினர் ஒத்திகை பயிற்சி

சென்னை: விபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிர்வாக அலுவலக கட்டிடத்தில்  பேரிடர் மீட்பு குழுவினர் ஒத்திகை பயிற்சி நடத்தினர். கோயம்பேடு மெட்ரோ ரயில் நிர்வாக அலுவலக கட்டிடத்தில் இயற்கை பேரிடர் காலத்தில் ஏற்படும் விபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரிடர் மீட்பு குழுவினரின் ஒத்திகை பயிற்சி நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மெட்ரோ ரயில் நிர்வாக பாதுகாப்பு அதிகாரி பிரபாகரன், அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு குழு உதவி கமாண்டர் சுதாகர், தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு கமாண்டர் செந்தில், மாவட்ட தீயணைப்பு அலுவலர் கார்த்திகேயன், மருத்துவ கல்வி இயக்குநர் செந்தில் குமார், கோயம்பேடு காவல்நிலைய ஆய்வாளர் சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டர்.

Related Stories: