×

மதுராந்தகத்தில் ஏற்பட்ட சாலை விபத்து காரணமான உயிரிழப்புகளால் வேதனை அடைந்துள்ளேன் : பிரதமர் மோடி இரங்கல்!!

சென்னை : தமிழ்நாட்டின் மதுராந்தகத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.சென்னை கோயம்பேட்டில் இருந்து சிதம்பரத்துக்கு இன்று காலை 6 மணியளவில் அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். சிறிது தூரம் சென்றதும், முன்னால் இரும்பு ராடுகளை ஏற்றி கொண்டு மதுராந்தகத்தில் இருந்து திண்டிவனத்துக்கு ஒரு லாரி, மெதுவாக சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை முந்தி செல்ல பஸ் டிரைவர் முற்பட்டார்.

அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக லாரியில் பஸ் பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சின் இடதுபுறம் நொறுங்கியது. பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அலறி துடித்தனர். சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்து, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 2 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக இறந்தனர். 10 பேர் படுகாயமடைந்தனர்.
இதற்கிடையில் தகவலறிந்து அச்சிறுப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தீயணைப்பு படை வீரர்களும் விரைந்தனர். பொதுமக்களின் உதவியுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த 10 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்கள் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் மதுராந்தகத்தில் ஏற்பட்ட ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.பிரதமர் அலுவலக ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
“செங்கல்பட்டில் ஏற்பட்ட சாலை விபத்து காரணமான உயிரிழப்புகளால் வேதனை அடைந்துள்ளேன்.  தங்களின் அன்புக்குரியவர்களை இழந்திருப்போருக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன், எனத் தெரிவித்துள்ளார்.


Tags : Madhuranthak ,Modi , Madhurandakam, road, accident, loss of life, Prime Minister Modi
× RELATED அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம்...