×

ரூ.3.5 கோடி பயிர்க்கடன் மோசடி மத்திய கூட்டுறவு வங்கி ஆய்வாளர் சஸ்பெண்ட்

சேலம்: பயிர்க்கடன் மோசடி விவகாரம் தொடர்பாக மத்திய கூட்டுறவு வங்கி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் இடைப்பாடியில் வெள்ளிரிவெள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இச்சங்கம் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் ரூ.3.5 கோடி மோசடி நடந்தது  கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த முறைகேட்டில் சேலம் மத்திய கூட்டுறவு வங்கி ஆய்வாளர் வெங்கடேசுக்கு தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.  இதையடுத்து ஆய்வாளர் வெங்கடேசை சஸ்பெண்ட் செய்து மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். மோசடி புகாரில் சங்க செயலாளர் மோகன் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


Tags : Central Cooperative Bank , Crop loan fraud, Central Co-operative Bank Inspector, suspended
× RELATED தடையற்ற மும்முனை மின்சார விநியோகம்