×

இந்திய மாணவர்களுக்கு விரைவில் விமான சேவை: சீன அமைச்சரிடம் ஜெய்சங்கர் வலியுறுத்தல்

புதுடெல்லி: இந்தியா-சீனா இடையேயான லடாக் எல்லை விவகாரம் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டுமென்று சீனாவை இந்தியா வலியுறுத்தி உள்ளது. இந்தோனேஷியாவின் பாலியில் 17வது ஜி-20 மாநாடு வரும் நவம்பர் 15, 16ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதனையொட்டி, ஜி-20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு கடந்த 2 நாட்களாக பாலியில் நடந்து வருகிறது. இதற்காக பாலி சென்றுள்ள ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அங்கு சீன வெளியுறவு அமைச்சர் வாங் லீயுடன் நேற்று ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, கிழக்கு லடாக் எல்லை மோதல் பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக, இரு நாட்டு ராணுவத்துக்கு இடையேயான பேச்சுவார்த்தையை தொடருவது, சீனாவில் மருத்துவம் பயிலும் இந்திய மாணவர்கள் மீண்டும் அங்கு சென்று படிப்பதற்கு உதவும் வகையில் விமானப் போக்குவரத்தை தொடங்குவது, முந்தைய பேச்சுவார்த்தைகளின் போது ஒப்புக்கொண்டபடி, சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து அமைதியான முறையில் படைகளை வாபஸ் பெறுவது உட்பட பல்வேறு பிரச்னைகளுக்கு விரைவாக தீர்வு காண்பது பற்றி வாங்கிடம் ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.

* இந்தோனேஷியா, மெக்சிகோ, அர்ஜெண்டினா, தென் ஆப்ரிக்கா மற்றும் செனகல் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடனும் சுகாதாரம், வேளாண்மை, உர உற்பத்தி, ரயில்வே, மின், சூரிய மின்சக்தி பரிமாற்றம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்தும் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

Tags : Jaishankar ,Chinese , Air service for Indian students soon: Jaishankar urges Chinese minister
× RELATED ஆபாச வீடியோ அனுப்பி மனைவியை...